பேச்சை குறைச்சிட்டு செயலில் காட்டுங்கள்... முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்...!

By vinoth kumarFirst Published Feb 19, 2021, 5:35 PM IST
Highlights

அலட்சியம் காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது தேர்தலுகாக வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அலட்சியம் காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது தேர்தலுகாக வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களைப் பல வகைகளிலும் வதைத்ததுடன், வழக்கும் போட்டுத் துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயணம் உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதைக் கடந்த ஜனவரி மாதமே விரிவாக எடுத்துரைத்த போதும், அலட்சியம் காட்டிய அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர் பழனிசாமி, இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது என்றதும் வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். 

சி.ஏ.ஏ.வை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுவது குறித்து சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்படும் எனவும் தனது பரப்புரையில் வரிசையாக அறிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றபோதும், தி.மு.க. முன் வைத்த கோரிக்கையைக் காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர். 

click me!