சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க MLA,அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை.. சட்டப்பேரவை செயலாளர் சுற்றறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Feb 19, 2021, 4:43 PM IST
Highlights

பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்குள்ளாக covid-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழுடன் 22-2-2021 அன்று காலை 10 மணி முதல் இரவு 9:30 மணி வரை செயலக சார்பு செயலாளர் மு.மோகன்ராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு அனுமதி அட்டை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

23-2-2011 அன்று முதல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர்கள் covid-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை செயலாளர் கி.சீனவாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் 2021 பிப்ரவரி  23 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகைக் கூட்ட அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. 

covid-19 தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அணைகளில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வருகைதரும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட அனைவரும் பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்குள்ளாக covid-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழுடன் 22-2-2021 அன்று காலை 10 மணி முதல் இரவு 9:30 மணி வரை செயலக சார்பு செயலாளர் மு.மோகன்ராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு அனுமதி அட்டை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மோகன்ராஜ் கைபேசி எண் (78 715 428 55) மற்றும் (97 890 873 85) covid-19 பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலைவாணர் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் (20-2-2021) மற்றும் (21-2-2021) ஆகிய நாட்களில் பேரவை வளாகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வு அறை மற்றும் 20-2- 2021 அன்று முதல் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் வரை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள குழுக் கூட்ட அறையிலும் covid-19 பரிசோதனை மேற்கொள்ள ஒரு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!