டீசல் விலை ஏற்றம் எதிரொலி.. சரக்கு லாரி சேவை கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது. சரக்கு லாரி உரிமையாளர் சங்கம் தகவல்

Published : Feb 19, 2021, 04:56 PM IST
டீசல் விலை ஏற்றம் எதிரொலி.. சரக்கு லாரி சேவை கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது. சரக்கு லாரி உரிமையாளர் சங்கம் தகவல்

சுருக்கம்

டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக சரக்கு லாரி சேவை கட்டணம் 25 சதவீதம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு சரக்கு லாரி உரிமையாளர் நலச்சங்க தலைவர் ரமேஷ் அறிவித்துள்ளார். 

டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக சரக்கு லாரி சேவை கட்டணம் 25 சதவீதம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு சரக்கு லாரி உரிமையாளர் நலச்சங்க தலைவர் ரமேஷ் அறிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு தொடர்பாக செய்தியாளர் சந்தித்த சரக்கு லாரி உரிமையாளர் நலச்சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது, டீசல் விலை உயர்வின் காரணமாகவும் விலை அதிகரித்ததன் காரணமாக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள சரக்கு லாரி சேவை கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்படும். 

ஏற்கனவே 30 லிருந்து 40 சதவீதம் வரை இந்த கட்டணத்தை உயர்த்த முடிவு எடுத்து இருந்ததாகவும், செயற்குழுவைக் கூட்டி பொது மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என்பதற்காக 25 சதவீதம் கட்டண உயர்வு என்பதை நிர்ணயம் செய்துள்ளதாகவும் கூறினார். 

இன்று முதல் அதை அமல் படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் டீசல் விலை உயர்வு மட்டுமே எங்களது சேவை கட்டண அதிகரிப்புக்கு காரணம் எனவும் ஐந்திலிருந்து பத்து ரூபாய் திடீரென டீசல் விலை குறையும்போது விலை ஏற்றத்தையும் அதற்கேற்ப திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் சங்கத்தினர் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.  

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!