Exclusive:கன்னியாகுமரி தொகுதியில் பிரதமர் மோடியின் நிழல் வேட்பாளர்! யார்அவர் ? கதிகலங்கும் காங்கிரஸ் கட்சி ..!

By T Balamurukan  |  First Published Sep 20, 2020, 10:54 PM IST

அந்த புது முகம் யார்? என்கிற ஆர்வம் கன்னியாகுமரி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.
 


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி, காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவுக்கு பிறகு காலியாக உள்ளது.காங்கிரஸ் கட்சியை விட பாஜக சார்பில் இந்த தொகுதிக்கு நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி தலைமையிடம் முட்டி மோதி வருகிறார்கள். இதில் யாருக்கு சீட் கொடுத்தாலும் உள்ளடி வேலைகளால் பாஜக தோல்வியை தழுவும் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறதாம். எனவே இவர்கள் இருவருக்கும் சீட் கொடுக்காமல் புதுமுகத்தை களத்தில் இறக்கிவிட பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது. அந்த புது முகம் யார்? என்கிற ஆர்வம் கன்னியாகுமரி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

Tap to resize

Latest Videos

undefined

பிரதமர் மோடியின் நிழல் மனிதராக வலம் வந்தவர் ஜெகதீஸ்பாண்டியன் ஐஏஎஸ்.இவரது சொந்த ஊர் மதுரை.
இவர் குஜராத் மாநிலத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது தலைமை செயலாளராக இருந்தவர்.மாநிலத்தில் எந்த திட்டங்கள் புதிதாக வரையறை செய்தாலும் அடிக்கல் நாட்டினாலும் மோடியும் இவரும் பிரார்த்தனை செய்த பிறகே எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்லுவார்களாம்.! அந்த அளவிற்கு மிகவும் நெருக்கமானவர்கள்.இந்தநிலையில் தான்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளரை முடிவு செய்து விட்டார் பிரதமர் மோடி.அதற்கான அனைத்து கணக்கெடுப்பு பணிகளும்,சர்வே முடிவும் அவரது கைக்கு சென்று விட்டன.இதன் படி முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியான  ஜெகதீஷ் பாண்டியன் களமிறக்க பட உள்ளார்.கிறித்தவ மதத்தை சேர்ந்த இவரை பாஜக வேட்பாளராக களமிறக்கி எம்.பி.ஆக்குவதுடன் கேபினட் மந்திரி பதவியையும் வழங்க முடிவு செய்ய பட்டுள்ளதாம்.

ஜெகதீஷ் பாண்டியனின் உற்ற நண்பர்தான் தற்போது மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் வெளியுறவு துறை மந்திரியான ஜெய்சங்கர்.இவரும் குஜராத்தில் மோடியின் கால கட்டத்தில் ஐ.எப்.எஸ்.இலாகாவில் பணிபுரிந்தவர்தான்.அத்துடன் ஜெய்சங்கரின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடியாகும்.ஜெகதீஷ் பாண்டியனின் இன்னொரு நண்பர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.குமரியில் மோடியின் வேட்பாளராய் களமிறக்க படும் ஜெகதீஷ் பாண்டியன் சி.எஸ்.ஐ.கிறித்தவ நாடார் ஆவார்.


கன்னியாகுமரி தொகுதியில் கிறித்தவர்கள் , நாடார் வாக்குகள் தான் அதிகம்.இவர்களில் ஒருவர் வேட்பாளராக களமிறக்கினால் வெற்றி என்பது எளிதாக அமையும் என்கிறார்கள். பாஜக மத்தியில் முழு மெஜாரிடியோடு ஆட்சி செய்தாலும் தமிழகத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. எப்படியாவது தமிழகத்தில் தாமரை மலரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதியாக பாஜக எம்பி அங்கே முழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மோடியும் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் முதல்படி தான் ஜெகதீஸ் பாண்டியன் கன்னியாகுமரி வேட்பாளர். பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கன்னியாகுமரி பகுதிக்கு முதன் முறையாக செல்ல இருக்கிறார். அவரது பயணம் வேட்பாளர் வெற்றி குறித்து தான் பேசப்படும் என்கிறார்கள் பாஜக மூத்தநிர்வாகிகள்..
தமிழகத்தில் தாமரை மலர பாஜக படாதபாடு படுகிறது..! திராவிட மண்ணில் பாஜக தாமரை மலர போடும் திட்டங்கள் எப்படி சக்ஜஸ் ஆகும் என்பதை  பொருத்திருந்து பார்ப்போம்..!
 

click me!