தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பக்கா பிளான்!! முக்கிய பிரச்சனைகளை கையிலெடுக்கும் பிஜேபி

By sathish kFirst Published May 27, 2019, 5:39 PM IST
Highlights

நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபிக்கு அமோக ஆதரவாகவும், தமிழக அளவில் மோடிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பாகவும் அமைந்ததை பிஜேபி யோசிக்க தொடங்கியுள்ளது. அவர்கள் எயோசிப்பதற்கு காரணம், பிஜேபி தலைவர்களான ஹெச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை தோற்கடித்தது மட்டும் அல்லாமல், கூட்டணி வைத்த ஒரே காரணத்துக்காக மொத்தமாக வாஷ் அவுட் செய்திருந்தது தமிழக தேர்தல் வரலாற்றில் மறுக்க முடியாத சம்பவம்.

நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபிக்கு அமோக ஆதரவாகவும், தமிழக அளவில் மோடிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பாகவும் அமைந்ததை பிஜேபி யோசிக்க தொடங்கியுள்ளது. அவர்கள் எயோசிப்பதற்கு காரணம், பிஜேபி தலைவர்களான ஹெச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை தோற்கடித்தது மட்டும் அல்லாமல், கூட்டணி வைத்த ஒரே காரணத்துக்காக மொத்தமாக வாஷ் அவுட் செய்திருந்தது தமிழக தேர்தல் வரலாற்றில் மறுக்க முடியாத சம்பவம்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் பார்த்த பிஜேபி முக்கிய புள்ளிகளுக்கு நாடு முழுவதும் தேவைக்கு அதிகமாக சீட் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், தமிழகம் மற்றும், கேரளாவில் ஒரு சீட்டு கூட பிடிக்காதது அதிரவைத்தது. 

கேரளாவைப் பொறுத்தவரை, சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்தும் கேரளாவில் பிஜேபியால் ஜெயிக்க முடியலை. அதேபோல தமிழகத்தில் தேர்தல் பிரசார நேரத்தில் இந்து விரோதிகள்னு தி.மு.க. கூட்டணியை விமர்சித்தும் தமிழ்நாட்டிலும் ஜெயிக்கலை. அதனால மாநிலப் பிரச்சினைகளை கையிலெடுத்தாதான், தமிழக மக்களைக் கவர முடியும்ங்கிற வியூகத்தில், 7 தமிழர்கள் விடுதலை பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்குதாம். அதைப் புரிஞ்சிக்கிட்ட கவர்னர் புரோகித், அந்த 7 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை விடுவித்தால் சட்டச் சிக்கல் எதுவும் ஏற்படுமா? அப்படியே அவர்களை விடுவித்தாலும் அவர்கள் இங்கே தொடர்ந்து தங்குவதற்கு இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இல்லைன்னா அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பலாமா?, அங்குள்ள அரசு அவர்களை ஏத்துப்பாங்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு  சட்ட ஆலோசகர்களிடம் கேட்டிருக்கிறாராம். 

இதன்பிறகு, அந்த 7 பேர் விடுதலையில் ஒரு முடிவை எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கவரலாம்னு பிஜேபி. தலைமை ஆலோசிச்சிருக்குது.மேலும் தமிழகத்தில் பிஜேபி தோல்வி அடைந்தது குறித்து விசாரித்து வருவதாகவும்,விரைவில் தமிழ்நாடு பிஜேபியில் நிறைய மாற்றங்கள் வரும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக, தமிழகம் உள்ளிட்ட 4 தென் மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை விரைவில் நடவடிக்கை எடுக்கும். இந்த திட்டம் 60,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். கோதாவரி நதியில் இருந்து 1,100 டிஎம்சி நீர் கடலில் வீணாவது தடுக்கப்படும் என்றும் இந்த இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும் அதேபோல தூத்துகுடி மக்களுக்கு ஆபத்தாக விளங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடவடிக்கையில் குதிக்கவுள்ளார்களாம்.

இப்படி பல விஷயங்களை அடுத்தது நாட்களிலேயே பிஜேபி இதற்கான வேலைகளை ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.

click me!