“தி.மு.க.வின் புதிய தொண்டர் படை !!” போலீஸை சீண்டிவிட்டு சீனாகும் மாஜி அமைச்சர் - யார்னு தெரியுமா?

By Ganesh RamachandranFirst Published Jan 3, 2022, 4:16 PM IST
Highlights

உயர்கல்வித்துறை எனும் கண்ணியத்திற்குரிய பதவியை நிர்வகித்த மாஜி அமைச்சர், மேனர்ஸோடு பேசுவது அவரது கண்ணியத்துக்கு நல்லது என்று ஓப்பனாகவே சமூக வலைதளங்களில் எச்சரிக்கின்றனர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள்

பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையாகி, கிட்டத்தட்ட ரெண்டு நாட்கள் ”சின்னம்மா ஊர்வோலம்..! நேஷனல் ஹைவே எங்கெங்கும்..!” என்று சின்னத்தம்பி ரேஞ்சுக்கு சுத்திச் சுத்தி சென்னை வந்து சேர்ந்தார் ஒரு வழியாக. சிறைக்களைப்பு, பயணக்களைப்பு எல்லாம் முடிந்து, ஒரு வழியாக ஃப்ரெஷ்ஷாகி உட்கார்ந்த அவர், மீண்டும் அரசியல் ஃபைலை கையிலெடுத்தார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் இறங்கினார். அப்போது, அ.தி.மு.க.வில் தன்னை நுழைய விடாமல் தடுக்கும் அமைச்சர்களின் (அப்போ அ.தி.மு.க. ஆட்சியல்லவா!) லிஸ்ட்டை கேட்டார். அதில் முதல் மூன்று அமைச்சர்களில் ஒருவராக இருந்தார் சி.வி.சண்முகம். (இதே சி.வி.சண்முகம்தான், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் ஆரம்பித்தபோது, அன்றைக்கு இரவில் கண்கள் சிவக்க கன்னாப்பின்னானு பன்னீரை வறுத்தெடுத்தார் என்பது தனிக்கதை)

சி.வி.சண்முகம் தன்னை மிக மூர்க்கத்தனமாக எதிர்க்கிறார் என்று சசி கேள்விப்பட்ட போது அவருக்கு ஆச்சர்யம்.  அன்றிலிருந்து சண்முகத்தின் நடவடிக்கைகள், பேட்டிகளை பார்க்க ஆரம்பித்த சசிக்கு செம்ம ஷாக். ஏனென்றால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரை விமர்சனத்தில் வெச்சு வெளுத்துக் கொண்டிருந்தார் சி.வி.சண்முகம். அன்றே சசி அண்ட்கோ விமர்சித்தது ‘ஹலோவ் சண்முகம்! உமக்கு வாய்ல வாஸ்து சரியில்லைய்யா’ என்று. அன்றிலிருந்து சண்முகத்துக்கு எதிராகத்தான் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது சின்னம்மா அண்ட்கோ.

இந்நிலையில், தனது ஓவர் பேச்சினால், இப்போது தி.மு.க. தரப்பையும் தாறுமாறாக முறைக்க வைக்கத் துவங்கியுள்ளார் சண்முகம். ஆட்சி அமைந்ததில் இருந்தே அவர்களை ஓவராக சீண்டிக் கொண்டே இருப்பவர், இப்போது “தி.மு.க. அரசை எதிர்த்துப் பேசுவோர், தவறைச் சுட்டிக்காட்டுவோர் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. தி.மு.க.வின் தொண்டர் படையாக மாறிவிட்டது தமிழக போலீஸ். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து கவர்னரிடம் புகார் சொல்லியுள்ளோம்.” என்று செம்ம விமர்சனத்தை கொட்டியுள்ளார்.

இதில் தி.மு.க.வை விட ஓவர் காண்டாகியிருப்பது தமிழக போலீஸ்தானாம். தங்களை ‘தொண்டர் படை’ என்று மாஜி அமைச்சர் விமர்சித்துள்ளதை வன்மையாக கண்டிக்கத் துவங்கியுள்ளனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மூலமாக சமூக வலைதளங்களில் இதற்கு கண்டங்களை பதிவு செய்யும் அவர்கள் ‘உயர்கல்வித்துறை, சட்டத்துறை போன்ற கண்ணியத்திற்குரிய பதவிகளை நிர்வகித்த மாஜி அமைச்சர் சண்முகம், மேனர்ஸோடு பேசுவது அவரது கண்ணியத்துக்கு நல்லது. இல்லையென்றால் அவரது வட்டாரத்தின் உள்ளே நடமாடும் சமூக விரோத நபர்களை வட்டம் போட்டு காட்டினாலே மாஜி அமைச்சரின் உண்மை முகம், மக்களுக்கு தெரிந்துவிடும்.’ என்று விளாசியுள்ளனர். ஹெவி வெயிட் பதிலடிதான்!

click me!