அடுத்தடுத்து மரணிக்கும் திமுக விஐபிக்கள் !! முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் காலமானார் !!

Published : Jun 14, 2019, 10:14 AM IST
அடுத்தடுத்து மரணிக்கும் திமுக விஐபிக்கள் !!  முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் காலமானார் !!

சுருக்கம்

விழுப்புரம் திமுக எம்எல்ஏ ராதாமணி இன்று காலை மரணமடைந்த நிலையில், சற்று முன் திமுக முன்னர்ள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்ரமணியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஆண்டிமடம் சிவசுப்பிரமணியன் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும்,1989 ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.

1971 முதல் 1976 ஆண்டு வரையிலும்,  1986 முதல் 1990, ஆடு வரையிலும்  ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். மேலும் தற்போது திமுகவில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர்.

இவரது மகன் எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது அரியலுர் மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். 

சிவசுப்ரமணியன் நீண்ட காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். இவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார்.
மரணமடைந்த எஸ்.எஸ்.சிவசுப்ரமணியனின் உடல் ஆண்டிமடத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!