எடப்பாடியை வண்ணாரப்பேட்டைக்கு போகச்சொன்ன ஸ்டாலின்...!! வம்படியாக வந்து குறுக்கே படுத்த பொன்னார்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 17, 2020, 4:45 PM IST
Highlights

அண்டை நாடுகளிலிருந்தும் விரட்டி அடிக்கப்படும் சிறுபான்மையினரான இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் புத்த மதத்தினருக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி மட்டும்  ஏன் அவர் பேசவில்லை.?

மக்கள் மத்தியில் புதிய புதிய குழப்பங்களை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேட திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .  இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார் .  வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்திற்கு முதல்வர் சென்று பேசவேண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , 

 

திமுக காலத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தது உண்டு ,  குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டம் , அதில்  எத்தனை  போராட்டத்தில் நேரில் சென்று  கலைஞர் கருணாநிதி  பேசினார்.?  ஆக  ஸ்டாலின் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை  நிரூபித்துள்ளார் .  அவர் எப்போதும் போராளிகளின் குரலாக மட்டுமே ஒலிக்கிறார் .  குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்கள் ஒருவர்கூட பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு தெளிவு படுத்திவிட்டது ,  அதேபோல் அண்டை நாடுகளிலிருந்தும் விரட்டி அடிக்கப்படும் சிறுபான்மையினரான இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் புத்த மதத்தினருக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி மட்டும்  ஏன் அவர் பேசவில்லை.?  ஆகவே  புதிதுபுதிதாக பிரச்சினைகளை குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். 

தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப்பொறுப்பையும் திமுக தான் ஏற்க வேண்டும்.  பாகிஸ்தானை போராடிப் பெற்றோம் இந்துஸ்தானை சிரித்துக்கொண்டே பெறுவோம் என்று  ஜின்னா சொன்னதை நிறைவேற்ற ஸ்டாலின் பாடுபடுகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.?  தமிழகத்தை கிறிஸ்தவ பூமியாக மாற்றுவோம்  என்று மோகன் சி லாசரஸ் பேசியதை கண்டிக்க ஸ்டாலினுக்கு  மனம் வரவில்லையே.?  மதமாற்ற சக்திகளின் பின்னணியிலும் திமுகதான் செயல்படுகிறதா.?   என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டுமென பொன் ராதாகிருஷ்ணன் காட்டமாக கேள்வி எழுப்பினார் .
 

click me!