இந்தியர்களுக்கு வந்த கொரோனா, வந்த இடம் தெரியாமல் ஓடியது...!! வைரஸை அடித்து விரட்டிய கேரள மருத்துவர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 17, 2020, 4:18 PM IST
Highlights

கேரளா சுகாதாரத்துறையில் தீவிர சிகிச்சை காரணமாக ஆலப்புழா மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி உள்ள  நிலையில் புனே ரத்த மாதிரி சோதனை கூடத்தில் நடத்தப்பட்ட சோதனை இதை உறுதி செய்துள்ளது.   

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளான கேரள மாணவர்கள் இருவரும் குணமாகி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் ,  கொரோனா வைரஸ் ஏற்பட்டால்  சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது .சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியுள்ளது .  இதுவரையில் ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  சீனாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கு இது பரவி உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி  உள்ளது . 

இந்நிலையில் கேரளாவில் படிப்பு மற்றும் தொழில் நிமித்தமாக சென்றிருந்த இந்தியர்கள் நாடு திரும்பிவருகின்றனர்.   சீனாவில் மருத்துவம் பயின்று வந்த கேரள மாணவர்கள் கரோனா வைரஸ் பாதிப்புக்கு  பயந்து ஊர் திரும்பினர் ,  சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்கள் அனைவருக்கும் கேரளா சுகாதாரத்துறையில் மருத்துவ பரிசோதனை செய்தனர் .  இதில் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .  இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான  முதல் நபரான இந்த மாணவி உள்ளார். இவருக்கு திருச்சூர் மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது .  இவரைப் போன்று ஆழல்புழா மற்றும் காசர்கோடு  சேர்ந்த மேலும் 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது . 

கேரளா சுகாதாரத்துறையில் தீவிர சிகிச்சை காரணமாக ஆலப்புழா மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி உள்ள நிலையில் புனே ரத்த மாதிரி சோதனை கூடத்தில் நடத்தப்பட்ட சோதனை இதை உறுதி செய்துள்ளது.   இதையடுத்து சிகிச்சையில் இருந்த காசர்கோடு மாணவரும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார் .  இதனை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் . இந்நிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் அவர்களது வீட்டில் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு  மருத்துவ கண்காணிப்பில் இருப்பர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   கேரளாவில் கொரோனா பாதித்து மூன்றில் இரண்டு பர் குணமாகியுள்ளனர்,   இந்நிலையில் திருச்சூர் மாணவிக்கு  ரத்த மாதிரி முடிவுகள் இன்னும் வந்து சேரவில்லை , அந்த முடிவில் அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தால் அவரை வீட்டுக்கு அனுப்பப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  தற்போது திருச்சூர் மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரவித்துள்ளனர்.  

 

click me!