ஆட்சி நடத்தவே தெரியல என்று முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் முதல், கீழ்மட்ட அதிகாரிகள் வரை அச்ச உணர்வோடு செயல்படுகின்றனர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகின்றனர். தமிழகத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றோ, கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டும் என்றோ, இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கமோ சிறிதளவும் முதல்வருக்கு இல்லை.
undefined
அவர் மக்கள் மத்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் எங்கு இருக்கின்றனர் என்றே தெரியவில்லை. நிர்வாகம் நடத்த துப்பில்லாத ஆட்சி தற்போது நடக்கிறது. ஐ.எப்.எஸ் அதிகாரி வெங்கடாசலம் இறப்பில் சந்தேகம் இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். திமுக அரசு மீது குற்றச்சாட்டு வரும்போது, அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை, '2ஜி' வழக்கில் சாதிக் பாட்ஷா தற்கொலை நடந்தது. மரக்காணம் சேர்மன் தேர்தலில் மிரட்டப்பட்டதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் தயவால் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் அரசு, அதிகாரிகளை தற்கொலைக்கு துாண்டுகிறது’ என்று கூறினார்.