அ.தி.மு.க. வேட்பாளர்களை நினைச்சா பாவமா இருக்குது! டிபாசீட் பணத்தையும் இழக்கப்போறாங்க ! இடிச்சுத் தள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

By Vishnu PriyaFirst Published Mar 3, 2019, 12:57 PM IST
Highlights

தமிழக அரசியலில் இடி, மின்னல், மழை போன்ற அதிரடி கருத்துக்களுக்கு ஆல்டைம் டார்லிங் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான். வசைபாடி வாட்டி எடுப்பதில் எதிர்கட்சி ஆளுங்களை மட்டுமில்லை சொந்தக்கட்சி நபர்களையும் விட்டு வைக்கமாட்டார். பாரபட்சமே இல்லாமல் போட்டுத் தாக்கும் இளங்கோவனிடம் லேட்டஸ்டாக சிக்கியிருக்கிறது அ.தி.மு.க. கூட்டணி. 

தமிழக அரசியலில் இடி, மின்னல், மழை போன்ற அதிரடி கருத்துக்களுக்கு ஆல்டைம் டார்லிங் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான். வசைபாடி வாட்டி எடுப்பதில் எதிர்கட்சி ஆளுங்களை மட்டுமில்லை சொந்தக்கட்சி நபர்களையும் விட்டு வைக்கமாட்டார். பாரபட்சமே இல்லாமல் போட்டுத் தாக்கும் இளங்கோவனிடம் லேட்டஸ்டாக சிக்கியிருக்கிறது அ.தி.மு.க. கூட்டணி. 

ஆளுங்கட்சி கூட்டணியில் பா.ம.க. சேர்ந்ததை ‘சூட், சொரணை இல்லையா?’ என்று கேட்டு தெறிக்கவிட்டார் ஸ்டாலின். அதை வழிமொழிந்தார் அன்புமணியின் சொந்த மச்சானான விஷ்ணுபிரசாத். தன்னைத் தாண்டி சில படிகள் இவர்கள் இருவரும் அதிரடி செய்துவிட்ட நிலையில், கொஞ்சம் யோசித்த இளங்கோவன் “கூட்டணி எனும் பெயரில் எடப்பாடியாரை ஏமாற்றி வாங்கிய பணத்தில் தைலாபுரத்தினுள் குடோன் கட்டுகிறார் ராமதாஸ்.” என்று இளங்கோவன் பத்த வெச்சாரு பாருங்க ஒரு ராக்கெட்டை. அது அரசியல் வானில் ஜகஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கீழே இன்னொரு பட்டாசையும் தெறிக்க விட்டிருக்கிறார் மனிதர்.

அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்புகளைப் பற்றி வாய் திறந்திருக்கும் இளங்கோவன் ”மிக மிக மோசமான அரசியல் அடியை வாங்க இருக்கிறது அ.தி.மு.க. எனக்கு அக்கட்சியின் வேட்பாளர்களை நினைத்தால்தான் மிக பாவமாக  இருக்கிறது. 

காரணம், மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகி இருக்கும் அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெறப்போகும் தோல்வியால் தன் மானம், மரியாதையை இழக்கப்போகிறது. அதோடு மட்டும் இல்லாமல் அந்த கட்சியின் வேட்பாளர்கள் தங்களின் டிபாசீட் பணத்தை கூட திரும்பப் பெற வழியில்லாமல் இழக்குமளவுக்குதான் மோசமான வாக்குகளை வாங்கப் போகிறார்கள். 

என்மோ தமிழகத்தில் தங்களுக்கு மெகா கூட்டணி அமைந்துவிட்டது, என்று ஆனந்தத்தில் இருக்கிறார் தமிழிசை. அவர் அப்படியே இசைபாடிக் கொண்டே போக வேண்டிதான் தேர்தலுக்குப் பின்...” என்று வெளுத்திருக்கிறார் இளங்கோவன்.

click me!