ஸ்டாலினுக்காக, இந்திராகாந்தியை அசிங்கப்படுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..? என்னதான் சொல்ல வர்றீக அமித்ஷா அண்ணாச்சி..!

By Vishnu PriyaFirst Published Apr 4, 2019, 5:53 PM IST
Highlights

தென்மாநிலங்களை பி.ஜே.பி. புறக்கணிக்கவில்லை. கேரளாவில் தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வாகவிட்டாலும் கூட நான்கு பேருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கினோம். ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினோம்

* தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலினை வாரிசு அரசியல்வாதி என்கிறீர்கள். அவர் பள்ளிக்கூட நாட்களில் இருந்தே கட்சிக்காக உழைத்தவர், அவசர நிலையின் போது சிறையில் கொடுமைகளை அனுபவித்தவர்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். (வர்ரே வாவ்! கூட்டணி தர்மத்தைக் காப்பாத்துறேன் பேர்வழின்னு, கூட்டணியின் தலைவரை புகழ்ந்து பேசுற நீங்க, சந்தடி சாக்குல எமெர்ஜன்ஸி கொடுமைகளை கதையை பேசி, உங்க கட்சியின் ராஜமாதா இந்திராகாந்தியை அசிங்கப்படுத்திட்டீங்ளே மிஸ்டர். இலா!)

* தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும், இது காலத்தின் கட்டாயம். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க.விற்கு ஆதரவு அளித்துள்ளோம். ராமதாஸ் வன்னிய சொத்துக்களை அபகரித்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: வேல்முருகன். 
(செவ்வாழ, நீ சப்போர்ட் பண்றதெல்லாம் சரி. ஆனா அதுக்காக நாங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தால்...டோல்கேட் ஆளுங்களை கும்மி எடுக்குறது, ஃப்ரீ பாஸ் கேட்டு டார்ச்சர் பண்றதுன்னு எதுவும் பண்ணாம, சமர்த்தா சைலண்டாவே இருக்கணும்.)

* இந்த தேசத்தில் மதவாத சக்திகளை வீழ்த்துவோம். தி.மு.க.வின் கூட்டணியானது சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். தமிழகத்தில் ஒருவிரல் புரட்சி வெடிக்கட்டும்: லீமாரோஸ் மார்ட்டின். (க்கும், முதல்ல உங்க புருஷன் இன்னமும் கள்ளத்தனமா நடத்திட்டு இருக்கிற ‘ஒரு நம்பர் லாட்டரி’யை முதல்ல ஒழிச்சாலே பாதி புரட்சி நடந்த மாதிரிதான். போங்க மேடம் போயி தண்ணியக் குடிங்க)

* ஏழை எளிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்காக, அம்மக்களோடு சாமான்யர்களாகவே பழகுபவர்கள்தான் நம் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். காமராஜர் ஆட்சிக்குப் பின் பொற்கால ஆட்சி என்றால் அது இதுதான்: ஜி.கே.வாசன். 
(ஜங்ங்ங்ங்ங்ங்ங் சக்! ஜங்ங்ங்ங்ங்ங் சக்! ஜங்ங்ங்ங்ங்ங் சக்! சின்னய்யா கொஞ்சம் கம்மி பண்ணுங்க. காது வலிக்குது!)

* தென்மாநிலங்களை பி.ஜே.பி. புறக்கணிக்கவில்லை. கேரளாவில் தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வாகவிட்டாலும் கூட நான்கு பேருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கினோம். ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினோம்: அமித்ஷா. (ஆக, இன்றைக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னா....தூத்துக்குடியில எங்கக்கா தமிழிசை செயிக்கலேன்னாலும் பரவால்ல, அவுகளுக்கு ராசிய சபாவுல ஒரு சீட்டு உறுதின்னு சொல்லுறீகளா அமித்ஷா அண்ணாச்சி!)

click me!