வாசன் மனசாட்சி உள்ளவர், அவரே அவருக்கு ஓட்டு போடமாட்டார்.!அவர் குடும்படும் அவருக்கு ஓட்டு போடாது-ஈவிகேஎஸ்

By Ajmal Khan  |  First Published Jul 21, 2023, 1:20 PM IST

அண்ணாமலை ஒரு நடிகர். அவர் நடைபயணம் போகிறாரா? பஸ் பயணம் போகிறாரா? ராகுல் காந்தியைப் போல ஆகிவிடலாம் என நினைக்கிறார் அது ஒருபோதும் நடக்காது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 


சிவாஜி நினைவு தினம்

நடிகர் திலகம் செவாலி சிவாஜி கணேசனின் 22 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரு உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா,பொன் கிருஷ்னமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்,

Tap to resize

Latest Videos

சுற்றுலா சென்ற பிரதமர் மோடி

நான் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் என் மீது மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருந்தவர் எனது ஆருயிர் அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன் நூறாண்டுகள் கடந்தாலும் அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேச சொன்னால்  பிரதமர் மோடி வெளியில் பேசியது ஜனநாயகப் படுகொலை. மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது பிரதமர் மோடி சுற்றுலா சென்று மற்ற நாட்டுத் தலைவர்களை பார்க்கிறார். பிரதமர் மனித சமுதாயத்தை சேர்ந்தவரா எனத் தெரியவில்லை. மணிப்பூர் கலவரம் இப்போது தான் பிரதமருக்குத் தெரிகிறதா? உளவுத்துறை என்ன செய்கிறது?

வாசனுக்கு அவரே ஓட்டு போடமாட்டார்

நாட்டில் 100க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதை விளம்பரம் செய்வது போல, இதையும் விளம்பரம்  செய்யலாம். இந்தியா கூட்டணியில் திமுக, மம்தா உள்ளிட்ட பலர் இருக்கின்றனர்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்களை பாருங்கள் கூட்டணியில், கட்சியில் ஒரே உறுப்பினராக இருக்கக்கூடிய வாசன் இருக்கிறார். வாசனுக்கு அவருக்கு குடும்பத்திலேயே ஓட்டு போடுவார்களா எனத் தெரியவில்லை. வாசன் மனசாட்சி உள்ளவர் என்பதால் அவரே அவருக்கு ஓட்டு போடமாட்டார்.

அண்ணாமலை ஒரு நடிகர்

எடப்பாடி பழனிசாமிக்கு 32 பல் இருப்பதையே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றபோது தான் பார்த்தேன். அண்ணாமலை ஒரு நடிகர். அவர் நடைபயணம் போகிறாரா? பஸ் பயணம் போகிறாரா? ராகுல் காந்தியைப் போல ஆகிவிடலாம் என நினைக்கிறார் அது ஒருபோதும் நடக்காது. அமலாக்கத்துறையை ஏவி இன்று நடவடிக்கை எடுக்கின்றனர். இதே நிலை மோடிக்கும் வரும்.மோடி மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இதே அமலாக்கத்துறை மோடி மீதும் பாயும் என ஈவிகேஎஸ் தெரிவித்தார்,

இதையும் படியுங்கள்

பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்..! ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கும் தலைகுனிவு - சரத்குமார் ஆவேசம்

click me!