ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவின் எந்த அணியும் போட்டியிடாது..! பாஜக தான் வேட்பாளரை நிறுத்தம்- ஈவிகேஎஸ்

By Ajmal KhanFirst Published Jan 23, 2023, 8:11 AM IST
Highlights

என் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், பா.ஜ.க. சார்பாக வேட்பாளரை நிறுத்தி அதிமுக அணிகள் ஆதரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் இவிகேஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் மற்றும் மக்கள் ராஜன் இடையே போட்டி ஏற்பட்டது. இந்த நிலையில் நேர்கணாலின் போது தனக்கு கண்டிப்பாக சீட் வழங்க வேண்டும் என கோரி அழுதுள்ளார். இதன் காரணமாக என்ன செய்வது என்று குழம்பிய மேலிடம் இவிகேஎஸ்யை வேட்பாளராக அறிவித்தது. இந்த நிலையில்  சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் மேலிடம் என்னை வேட்பாளராக அறிவித்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இளைய மகன் போட்டியிட வேண்டும் என விரும்பினேன். 

மிகப்பெரிய வெற்றி பெறுவேன்

காங்கிரஸ் மேலிடம் கட்டளையிடும் போது தேர்தலில் போட்டியிடுகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆதரவு தருவதாக சொன்ன தோழமை கட்சிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மகன் விட்டு சென்ற பணியை பூர்த்தி செய்வேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு தந்த வாய்ப்பு முலம் மிகப்பெரிய வெற்றி தர வேண்டும் என செயல் படுவேன். தேர்தல் பணியை திமுக தொடங்கி விட்டது. அமைச்சர்கள் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அதிமுக பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் எடுபடாது. திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கும் உழைப்புக்கும் நல்ல வெற்றியாக அமையும். திமுக-காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் நான் மிகப்பெரிய வெற்றியை அடைவேன். 

அழுது இருக்க கூடாது

அதிமுகவை சேர்ந்த 4 அணிகளும் போட்டியிடாமல் பா.ஜ.க. வேட்பாளரை நிறக் வைத்து ஆதரிக்க கூடும். பா.ஜ.க. நிற்கும் போது திமுக கூட்டணிக்கு மிக இலகுவாக வெற்றி கிடைக்கும். இந்த தேர்தலில் மிகப்பெரிய சவால் இருக்கும் என நினைக்கவில்லை. தமிழக முதலமைச்சரை சந்தித்த பின் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை சந்தித்து விட்டு ஈரோடு செல்வேன். ஈரோடு சென்று திமுக உள்பட கூட்டணி கட்சியினரை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பேன். மக்கள் ராஜன் பக்கத்து மாவட்ட தலைவர். அவர் சீட் கேட்டதில் தவறு இருப்பதாக கருதவில்லை. காங்கிரஸ் ஜனநாயக கட்சி. சீட் கேட்க உரிமை இருக்கிறது. கொஞ்சம் அழுது இருக்க வேண்டாம் என நினைக்கிறேன் என ஈவிகேஸ் இளங்கோவன் கூறினார்.

இதையும் படியுங்கள்

ஒரு வழியாக வழிக்கு வந்த ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு!

click me!