அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதெல்லாம் பச்சைப்பொய்... புட்டுப்புட்டு வைத்த பிரபல இயக்குநர்..!

By Thiraviaraj RMFirst Published Sep 8, 2021, 4:23 PM IST
Highlights

 உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார்.

மாதாந்திர மின் கட்டண முறையை செயல் படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்று தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர மின்கட்டணம் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை விடுத்திருந்தார். மின் கட்டணம் கணக்கிட்டால் தமிழக மக்கள் பல மடங்கு தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்காது என்ற கோரிக்கையை இயக்குநர் தங்கர் பச்சான் சில வாரங்களுக்கு முன் விடுத்திருந்தார். அதன்பின்னர், மின் கணக்கை சரிபார்த்து, விளக்கம் அளிக்க அவரது வீட்டுக்கு இரண்டு முறை சென்ற அதிகாரிகள், கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றைக்கொடுத்து, அதைப் படமெடுத்துச் சென்றதாக தங்கர் பச்சான் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது ட்விட்டர் பக்கத்தில், தங்கர் பச்சானின் மின் கணக்கு குறித்து விளக்கம் அளித்து விட்டதாக பதிவிட்டு இருந்தார். இதனிடையே, சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ’’மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக சமூக வலைதளங்களில் தங்கர் பச்சான் புகார் தெரிவித்தேன். அதற்கு உடனே அதிகாரிகள் விளக்கம் அளித்து விட்டனர். அதன் பின் அவர் `மன்னிப்பு'  கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தனக்கு விளக்கம் தேவையில்லை, கட்டணமுறை மாற்றம் தான் தேவை என்ற கோரிக்கையை மீண்டும் தெளிவு படுத்தியிருந்தார் தங்கர் பச்சான். இந்த நிலையில், மின் கட்டண கோரிக்கை தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப்பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்ட மன்றத்தில் பதில் அளித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார்.

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல. மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான்.

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல. மாதாந்திர மின் கட்டண முறையை செயல் படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான். . pic.twitter.com/dyJW94rg19

— தங்கர் பச்சான் Thankar Bachan (@thankarbachan)

 

முதலமைச்சர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும் திமுக தேர்தல் அறிக்கையிலும் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கின்றேன். இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள அனைவரின் பிரச்சினை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வார் என நம்புகின்றேன்”எனக் குறப்பட்டுள்ளது. 

click me!