ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 ஏக்கர் நிலங்கள்... கிறிஸ்தவர்களுக்காக திமுக எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 8, 2021, 3:44 PM IST
Highlights

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக உள்ள இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்குத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக உள்ள இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்குத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் சென்னைவாசி என தேர்தலுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை தூள் தூளாக உடைத்தெறியும் வகையில் திருச்சியில் குடியேறினார்.

அதோடு மட்டுமல்லாமல் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நாள் தவறாமல் சென்று குறைந்தது 3 மணி நேரமாவது அங்கு அமர்ந்து நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று அதனை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கிறார். இன்று பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அலுவலகத்தில் மனுக்களை பெறவும், மக்களின் குறைகளை கேட்கவும் ஆட்களை பணியமர்த்தியுள்ள சூழலில், இனிகோ இருதயராஜின் இந்த செயல்பாடு அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

எம்.எல்.ஏ. ஊரில் இல்லை, அங்கு வந்து பாருங்க, இங்க வந்து பாருங்க என்ற அலைக்கழிப்புக்கே வேலையில்லை. சட்டமன்றக் கூட்டத் தொடர் இல்லாத நாட்களில் வாரத்தில் 5 நாட்கள் திருச்சியிலும், 2 நாட்கள் மட்டும் சென்னையிலும் நேரத்தை செலவிடுகிறார் இனிகோ இருதயராஜ். இதனிடையே உள்ளூர் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மற்றும் கே.என்.நேரு ஆகியோர்களுடன் அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ளத் தவறுவதில்லை.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், "கல்லறைத் தோட்டம் அமைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 ஏக்கர் நிலங்களை அரசு ஒதுக்க வேண்டும்"
என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!