மொத்தம் ட்ராமா..? கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு.. ஸ்டாலினை கலாய்த்த ஆர்பி உதயகுமார்.

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2022, 11:33 AM IST
Highlights

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துபாயில் அளிக்கப்பட்ட வரவேற்பு தொடங்கி செம்மொழி பாடல் ஒளிக்கப்பட்டது வரை அனைத்தும் நாடகமாகவே நடந்துள்ளது. கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்ன ஆச்சு என்று மக்கள் இப்போது ஸ்டாலினை கேள்வி கேட்கிறார்கள். ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளதாக திமுக தெரிவிக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுக்கு துபாயில் வரவேற்பு அளிக்கப்பட்டது முதல் செம்மொழி பாடல் ஒழிக்கப்பட்டது வரை அனைத்தும் நாடகமாகவே நடந்துள்ளது என்றும், கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு என முதலமைச்சரை மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

 திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக- பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுகவே அதிகாரப்பூர்வ எதிர்க் கட்சியாக இருந்தாலும் பாஜகவே எதிர்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில்  அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. அதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதேபோல முதலமைச்சரின் துபாய் பயணத்தையும் அவர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊழல் செய்த 5000 கோடி பணத்தை துபாயில் முதலீடு செய்யவே ஸ்டாலின் பயணம் மேற்கொண்டதாக விமர்சித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் மற்றொருபுறம் அதிமுகவினரும் தங்கள் பங்குக்கு ஸ்டாலினின் பயணத்தை விமர்சித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை செல்லம்பட்டி பகுதிகளில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திறந்து வைத்தார்.  அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துபாய் சென்று 4000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை கொண்டு வந்தார் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அவரின் பயணத்தை ஏளனம் செய்தார். இப்போது துபாய் சென்று வந்திருப்பதில் திமுக பல்வேறு குளறுபடிகளை செய்திருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துபாயில் அளிக்கப்பட்ட வரவேற்பு தொடங்கி செம்மொழி பாடல் ஒளிக்கப்பட்டது வரை அனைத்தும் நாடகமாகவே நடந்துள்ளது. கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்ன ஆச்சு என்று மக்கள் இப்போது ஸ்டாலினை கேள்வி கேட்கிறார்கள். ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளதாக திமுக தெரிவிக்கிறது. ஆனால் அவர்கள் குறிப்பிடும் கட்டிட பணிகளுக்கான முதலீட்டின் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருக்கிறது எனக் கூறியுள்ளார். திமுக அரசின் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தன்னுடைய அதிகார சர்வாதிகார அடக்குமுறையால் அகதிகளைப் போல நடத்துகிறது. ஆனாலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்றும் களத்தில் மக்களுக்காக சேவை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!