
திமுக ஆட்சிக் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அமைச்சர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ அமைபுகளின் விசாரணைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த நாச்சியாள் சுகந்தி திமுக அமைச்சர்களின் ஊழல்களை பட்டியலிட்டுள்ளார்.
‘‘ஊழலே நடக்காத துறை என்றால் அது பிடிஆர் மட்டும்தான். ஜெம் மேன். அவரெல்லாம் தமிழக அரசியலுக்கு நான் திமுகவில் மட்டும் சொல்லவில்லை. தமிழக அரசியலுக்கு கிடைத்த ஜென்டில்மேன். ஆனால், நமது அரசியல்வாதிகள் அவரை மாதிரி ஆட்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள மாட்டேன்கிறது. அவரையெல்லாம் விடுங்க நேற்று வந்த டிஆர்பி ராஜா நமக்கு வந்த சர்வதேச கம்பெனிகள் எல்லாமே பக்கத்து மாநிலங்களுக்கு சென்று விட்டது. கூகுள் ஏன் இங்கே வராமல் ஆந்திராவுக்கு சென்றது.
35 சதவிகிதம் பங்கு கேட்டதால் போய்விட்டது. அப்போ இதெல்லாம் ஊழலில் வந்து சேராதா? திமுகவில் எல்லாதுறைகளிலும், 35 அமைச்சர்களும் முதல்வரில் ஆரம்பித்து விளையாட்டுத்துறை அமைச்சர்கள் வரை எவ்வளவு சொரண்ட முடியுமோ, அவ்வளவு சொரண்டி வைத்திருக்கிறார்கள். பிடிஆரை தவிர்த்து மற்ற எல்லோருமே கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். தங்க முட்டை போடும் வாத்து கதை தெரியுமா? அதுபோல தங்களது துறைகளை தங்க முட்டை போடுகிற வாத்தாக நினைத்து வயிற்றை கிழித்து உள்ளே இருந்த அத்தனை முட்டைகளையும் எடுத்து விட்டார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.