கொரோனா போரில் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்..! பிரதமர் மோடி பெருமிதம்..!

By Manikandan S R SFirst Published Apr 26, 2020, 11:48 AM IST
Highlights

தற்போது நடைபெறும் கொரோனாவிற்கு எதிரான போர்க்களத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் ராணுவ வீரர் தான். ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கு ஏற்ப கொரோனா போரை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேரடியாக உரையாடும் விதமாக மன் கி பாத் என்ற 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் என்கிற 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா ஒழிப்பில் மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. கொரோனா விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக இருக்கிறது. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள கொரோனா வாய்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரை ஒட்டுமொத்த மக்களும் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். கொரோனாவிற்கு எதிரான மக்களின் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். தற்போது நடைபெறும் கொரோனாவிற்கு எதிரான போர்க்களத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் ராணுவ வீரர் தான். ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கு ஏற்ப கொரோனா போரை எதிர்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் நடந்த சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தாக்கியவர்கள் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது. தற்போது நிலவும் இக்கட்டான நிலையில் நாட்டில் யாரும் பசியுடன் இல்லை என்பதை விவசாயிகள் கடினமாக உழைத்து உறுதி செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். சிலர் வீட்டு வாடகையை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பள்ளியில் வர்ணம் தீட்டுகிறார்கள். மக்களின் முழு ஈடுபாடே இப்போராட்டத்திற்கு காரணம். இந்த பெரும் போராட்டத்தில் மக்களுடன் அரசும் இணைந்து இருக்கிறது. ஒரு சிறந்த வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனும் கொரோனாவை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!