கைலாசாவிற்கு நோ லாக்டவுன்.... டிக்டாக் வீடியோக்களை வெளிட்டு கும்மாளமிடும் நித்தியானந்தா சீடர்கள்.!!

Published : Apr 25, 2020, 09:33 PM IST
கைலாசாவிற்கு நோ லாக்டவுன்.... டிக்டாக் வீடியோக்களை வெளிட்டு கும்மாளமிடும்  நித்தியானந்தா சீடர்கள்.!!

சுருக்கம்

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கால் முடங்கி  முடங்கிப் போய் இருக்கிறது. இந்த நிலையில் நித்தியானந்தா "கைலாசா"வுக்கு நோ லாக்டவுன் என்று சொல்லி டிக்டாக் விடியோக்களை அவரது சீடர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். 

T.Balamurukan

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கால் முடங்கிப் போய் இருக்கிறது. இந்த நிலையில் நித்தியானந்தா "கைலாசா"வுக்கு நோ லாக்டவுன் என்று சொல்லி டிக்டாக் விடியோக்களை அவரது சீடர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். 

 சில நாட்களாக வீடியோக்கள் வெளியிடுவதை நிறுத்தி இருந்த நித்யானந்தா தற்போது மீண்டும் பல காமெடி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். எடை குறைந்து, ஸ்லிம்மாக மாறி உள்ள அவர் கதாநாயகன் போல நரைத்த வெள்ளை முடி கலந்த தோற்றத்தில் அசத்தலாக காட்சி அளிக்கிறார்.

நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்திராட்ச மாலை, கையில் சூலாயுதம் தாங்கி போஸ் கொடுக்கும் அவரின் பின்னால் அவரது புகழ் பரப்பும் வகையிலான பாடல்கள் ஒலிக்கிறது.இவர் தான் இப்படி என்றால் இவரது சீடர்கள் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. டிக்டாக்கில் ஏராளமான வீடியோக்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.

சாமிஜி கொடுத்த லட்டை சாப்பிடும் பெண் சீடர்கள் "கைலாசாவுக்கு நோ லாக்டவுன்" என்று தலைப்பிட்டு வித விதமான வீடியோககளை டிக்டாக்கில் வெளியிட்டிருக்கிறார்கள். "காதல் மன்னன்" படத்தில் இடம்பெற்ற 'பெண்கள் விரும்பும் பேரழகன் இவனே காதல் மன்னன்" என்ற வரிகளுக்கு பெண் சீடர்களின் ஆடிய டிக் டாக் வீடியோ லைக்குகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறது. 


இது மட்டும் அல்லாமல், பம்பாய் படத்தில் இடம் பெற்ற கண்ணாளனே பாடல், அருணாசலம் படத்தில் இடம் பெற்ற சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் என பல்வேறு ஹிட் பாடல்களுக்கு டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வரும் பெண் சீடர்கள், தங்களது குருஜியை "பாகுபலி" ரேஞ்சுக்கு புகழ்ந்து வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றது.கவுண்டமணி- சத்யராஜ் காமெடியை வைத்துக் கொண்டு குருஜியை கலாய்த்தும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இன்டர்போல் போலீஸ் டீம் கண்டுபிடிக்க முடியாத கைலாசா தீவு அதிபர் என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் நித்தியானந்தா எப்போதும் சர்ச்சைக்குரியவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 

PREV
click me!

Recommended Stories

Praveen Chakravarty: தவெக தயவில் எம்.பி.யாகும் ராகுலின் வலது கரம்! யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?
TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!