ஆட்சி மாறினாலும் காட்சி மாறல.. கூட்டணி கட்சிகள் மீதே வழக்கு.. திமுகவை டரியல் ஆக்கிய தி.வேல்முருகன்..

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2021, 9:57 AM IST
Highlights

அப்போது திமுக விசிக  இடையே கருத்து மோதல் உருவானது, ஆனால் சுதாரித்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை அழைத்து நடத்திய பேசிய பின்னர் அது சுமுகமாக முடிந்தது. 

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் கட்சியிலுள்ள தங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாகவும், அதிமுக ஆட்சியில் இருந்த அதே நிலைமை தற்போதும் தொடர்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல துறைகளில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. ஆனால் அந்த அளவிற்கு தற்போது பெய்து வரும் கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில்  அரசின் நடவடிக்கைகள் தீவிரமாக இல்லை என்றும் விமர்சனங்கள் இருந்து வருகிறது. ஸ்டாலின் முதலமைச்சராக அரியணை ஏறி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அவர் முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

அப்படி நிறைவேற்றப்படாத இதற்கு நிதி நெருக்கடியே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்துக் கோயில்களை குறிவைத்து திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், திமுக ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் உள்ளது என்றும் எதிர்க்கட்சியான பாஜக அதிமுக கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க,  திமுகவின் கூட்டணி கட்சிகளே இப்போது அக்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூற தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த மாதம் சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கொடியை ஏற்றுவது தொடர்பாக காவல் துறையினர் அனுமதி மறுத்ததுடன், அங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். அதை கண்டித்துப் பேசிய திருமாவளவன் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காவல்துறை தான் காரணம், ஆட்சி மாறினாலும் இன்னும் காவல்துறை அதிமுக மனநிலையிலேயே உள்ளது. கொடியை ஏற்ற அனுமதிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அவர் அறிவிப்புச் செய்தார். அப்போது திமுக விசிக  இடையே கருத்து மோதல் உருவானது, ஆனால் சுதாரித்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை அழைத்து நடத்திய பேசிய பின்னர் அது சுமுகமாக முடிந்தது. ஆனாலும் அதில் கொடியேற்ற முயன்ற 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி க்கு எதிராக அதிமுக நிர்வாகி ஒருவர் கருப்புக்கொடி காட்டி விவகாரம் கூட்டணியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் ஒருவரான தி. வேல்முருகன் திமுக அரசை விமர்சித்துள்ளார். அதாவது, நேற்று சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள  மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ புத்தகத்தை வெளியிட மற்றவர்கள் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர். அப்போது பேசிய தி. வேல்முருகன், இந்த மேடையில் உள்ள தலைவர்கள், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பிரபாகரனை நேரில் சந்தித்துள்ளனர்.

எனவே அவர்கள் அது குறித்து நிறைவாக பேசுவார்கள், ஆனால் நான் ஒருமுறைகூட அவரை நேரில் சந்தித்ததில்லை. விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை விடுதலைப்புலிகள் வரலாறு கூறுகிறது. தமிழீழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானது, விடுதலைப் புலிகளோடு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் எப்படி இணைந்து செயல்பட்டனர் என்பதையும் இந்த நூல் கூறுகிறது. விடுதலைப் புலிகள் போராட்டம் குறித்து தற்போது உள்ள இளைஞர்களுக்கு தெரியவில்லை, அதனால் சிலர் சினிமா கதைகளை கூறிக்கொண்டுள்ளனர். அதற்கு கைதட்ட ஒரு கூட்டம் உள்ளது. யார் உண்மையான தமிழ் தேசியவாதி, போலித் தமிழ் தேசியவாதி  என இப்புத்தகத்தைப் படித்தால் புரியும். நேற்று விடுதலைப் புலிகள் தலைவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது, அதில் பங்கேற்றதற்காக என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, அதிமுக நிலைமையே  இப்போதும் தொடர்கிறது. அதிமுகவை போலவே கூட்டணியில் உள்ள திமுக அரசு எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 
 

click me!