நான் தோற்றாலும் கயித்துக் கட்டிலும், எனது ஆட்டுக்குட்டிகளும் இருக்கின்றன... அசால்டு காட்டும் அண்ணாமலை..!

By Thiraviaraj RMFirst Published May 1, 2021, 5:19 PM IST
Highlights

நாளை கருத்து கணிப்புகள் வெளியாக உள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களில் அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறார். 

நாளை கருத்து கணிப்புகள் வெளியாக உள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களில் அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறார். 

இந்நிலையில் அவர் குறித்து கருத்து பதிவிட்டுள்ள மாரிதாஸ், "கருத்துக்கணிப்புகளும் ஜோதிட கணிப்புகளும் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலைக்கு எதிராக இருக்கின்றதே..." இந்த கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்கின்றனர். அவர்களுக்கு என் பதில் இது தான். "ஆரம்பம் முதல் தற்போது வரை "அண்ணாமலைக்கு எதிராக" என்ற வார்த்தை தான் அதிகம் நம் கண்களில் பட்டும் காதுகளில் கேட்டும் இருக்கின்றது. "அண்ணாமலைக்கு சாதகம்" என்று அங்கு எதுவுமே இல்லை. இவை எல்லாம் நன்கு தெரிந்து தான் அவர் அங்கு போட்டியிட்டார். அவருக்காக ஏகப்பட்ட இளைஞர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வேலை செய்தனர்.

திமுகவிலோ அதிமுகவிலோ பாஜகவிலோ மற்ற கட்சிகளிலோ எந்த ஒரு வேட்பாளருக்கும் இவ்வளவு தன்னார்வளர்கள் வந்து வேலை செய்ததாக ஏதும் செய்தி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா.?  இருக்காது. அண்ணாமலை என்ற மனிதனுக்காகத் தான் அத்தனை உழைப்பும். அத்தனை ஆதரவும். ஜாதகப் பலன்கள் அனைத்தும் திமுகவின் மொஞ்சனூர் இளங்கோவிற்கு சாதகமாக இருக்கின்றது என்ற செய்தியை கேட்கும் போது ஒன்று தான் புலப்படுகின்றது. பகுத்தறிவு கட்சியான திமுகவே ஜாதகம் பார்த்து வேட்பாளரை நிறுத்தியுள்ள தொகுதியில் சங்கிக் கட்சியான பாஜக ஜாதகம் பார்க்காமலா இருந்திருக்கும்?

நிச்சயம் அண்ணமலைக்கு சாதகமாக ஜாதகம் இல்லாத நிலையில்  ஏன் அங்கு அண்ணாமலை நிற்க வேண்டும்? ஜாதகம் எல்லாம் தாண்டிய மக்கள் சக்தி என்று ஒன்று இருக்கின்றது இல்லையா அதன் மீதான நம்பிக்கையில் தான். அதையும் தாண்டி தன் அரசியல் பயணத்தை தன் சொந்த ஊரில் களம் கண்டு துவங்க வேண்டும் என்ற அவரின் எண்ணமும் கூட.

அண்ணாமலை என்ற ஒற்றை நம்பிக்கை தான். ஜெயித்தால் நம் உழைப்பிற்கான பலன் கிடைத்தது என சந்தோஷம் கொள்வோம். தோற்றால் மீண்டும் அதே இடத்தில் களம் கண்டு அடுத்த முறை ஜெயிப்போம். அவ்வளவு தான். வெற்றி தோல்வி என்பதை நாம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மிகப்பெரும் பதவியையும். தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சொத்துக்களையும் செல்வங்களையும் இழந்து தேர்தலை சந்தித்த அவர் எப்படி இதை எடுத்துக்கொள்வார் என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அதற்கும் அவர் பதில் கொடுத்துவிட்டார்.

"ஒன்றுமே இல்லாமல் போனாலும் என் தோட்டமும் அதில் உள்ள வேப்ப மரமும், கயித்துக் கட்டிலும், எனது ஆட்டுக்குட்டிகளும் இருக்கின்றன. அதை வைத்து எனது வாழ்க்கையை வாழ்ந்துகொள்வேன். எந்த தோல்வியும் எனக்கு புதிதல்ல" என்று கூறியுள்ளார்.
 

click me!