தனிச்சின்னத்தில் போட்டி.. பேரவைக்குள் பாஜக எம்எல்ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து.. எச்சரிக்கும் பாலகிருஷ்ணன்..!

By vinoth kumarFirst Published Mar 8, 2021, 11:47 AM IST
Highlights

6 தொகுதிகள் குறைவாக இருந்தாலும் அதிமுக பாஜகவை கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்பதற்காக திமுகவுடன் கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

6 தொகுதிகள் குறைவாக இருந்தாலும் அதிமுக பாஜகவை கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்பதற்காக திமுகவுடன் கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

திமுக கூட்டனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீட்டை அடுத்து இருகட்சிகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதனையடுத்து, சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன்;- அரசியல் கடமையை எங்களால் விட்டு விட முடியாது. எங்கள் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே திமுக கொடுத்த தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.  6 தொகுதிகள் குறைவாக இருந்தாலும் அதிமுக பாஜகவை முறியடிக்க வேண்டும் என்பதற்காக திமுகவுடன் கூட்டணி. 

பாஜக தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்பதற்காகவும், அரசியல் கடமையை கருதியும் குறைவான தொகுதியை ஏற்றுக்கொண்டுள்ளோம். தமிழகத்தில் அரசியல் கடமையை ஒன்றிணைந்து செயல்படுத்துவோம். மாநிலங்களவை தேர்தல் வரும்போது சீட் தொடர்பாக திமுகவுடன் பேசுவோம். திமுக கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும் என்றும் எதிர்பார்த்தோம். அதிகமான இடங்கள் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி கிடைத்திருக்கும். ஒரு பாஜக எம்எல்ஏ சட்டப்பேரவைக்கு வந்தால் கூட ஆபத்து ஏற்படும். அதை தடுக்கவேண்டும் என்பதே இலக்கு. மார்க்சிஸ்ட் கட்சி தனது சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில்தான் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் திமுகவிடம் கொடுக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

click me!