ஸ்டாலினை எதிர்க்காமல் ஒதுங்கியது ஏன்?... நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 8, 2021, 11:34 AM IST
Highlights

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் தீயாய் பணியை ஆரம்பித்துள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதை  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், 234 வேட்பாளர்களையும் சென்னை YMCA மைதானத்தில் ஒரே மேடையில் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார். மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் 50 சதவீத பெண் வாக்காளர்களை சீமான் களமிறக்கியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் எந்த தொகுதியில் யாரையெல்லாம் எதிர்த்து போட்டியிட உள்ளார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருந்தனர். காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என ஆவேசத்துடன் பிரச்சாரம் செய்து வந்தார் சீமான். திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சீமானும் அங்கு தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். கொளத்தூரில் போட்டியிடாதது குறித்து விளக்கமளித்துள்ள சீமான், “கொளத்தூரில் போட்டியிடலாம் என்று தான் இருந்தேன். ஆனால் மக்கள் நலன் தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் அல்ல. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம். அதனால் தான் கொளத்தூர் தொகுதிக்கு பதிலாக திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

click me!