ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்பாளரை வாபஸ் பெறுகிறாரா ஓபிஎஸ்?

By vinoth kumarFirst Published Feb 4, 2023, 12:01 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு  தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

அதிமுக பொதுக்குழு  தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால், இரட்டை சின்னம் யாரும் யாருக்கு செல்லும். அல்லது முடங்க போகிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இரட்டை இலையை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு  ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம்  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என கூறியிருந்தனர். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றார். 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் தங்கள் தரப்புக்கு போதுமான ஆதரவு கிடைக்காது என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

click me!