இபிஎஸ் கூற்றுகளை நிராகரித்த நீதிமன்றம்.. இடைக்கால பொதுச்செயலாளர் அதிகாரத்தை அளிக்கவில்லை.. ஓபிஎஸ் தரப்பு..!

By vinoth kumarFirst Published Feb 4, 2023, 6:51 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். 

அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பாதுகாத்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தும் விதமாக இந்த நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார். 

அதிமுக பொதுக்குழு  தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால், இரட்டை சின்னம் யாரும் யாருக்கு செல்லும். அல்லது முடங்க போகிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இரட்டை இலையை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு  ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க;- ஓபிஎஸ் வைத்த அந்த பாயிண்ட்... டோட்டலாக எடப்பாடிக்கு எதிராக மாறிய உச்சநீதிமன்றம் உத்தரவு..!

அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கின் தீர்ப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்து பெற ஓபிஎஸ் தரப்புக்கு அனுப்பலாம். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்திடுவது குறித்து ஓபிஎஸ் முடிவெடுக்கலாம். இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறியிருந்தனர். 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான அதிமுக எம்எல்ஏவும், வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன்;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஆரம்பத்தில் இருந்தே கழகத்தின் ஒற்றுமை அவசியம். இரட்டை இலையை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு நான் எந்த வேட்பாளராக இருந்தாலும் கையெழுத்தி போட தயார் என கூறி வந்தார். அதனடிப்படையில் அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பாதுகாத்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தும் விதமாக இந்த நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  அதிமுக யாருக்காகவும் காத்திருக்காது! ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு!டெல்லியில் சீறிய சி.வி.சண்முகம்

இந்த வழக்கை பொறுத்தவரை தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவுக்காக மட்டும் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்த இடைத்தேர்தலுக்கு மட்டும் பொருந்தும். இடைக்கால பொதுச்செயலாளர் என்று கடந்த சில மாதங்களாக கூறிக்கொண்டு எங்களுக்கு அதிகாரங்கள் இருக்கிறது என்ற இபிஎஸ் கூற்றுகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அந்த வகையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த அதிகாரத்தை அளிக்கவில்லை. அதேபோல் பொதுக்குழுவால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக நீக்கப்பட்ட 4 பேரின் கருத்துகளையும் இந்த பொதுக்குழுவில் தெரிவிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தர்மம் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது என மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-   வடஇந்தியாவில் பாஜக என்ன செய்து ஆட்சியை பிடித்தது எங்களுக்கு தெரியும்.. எச்சரிக்கையாக உள்ளோம்.. பொன்னையன்.!

click me!