ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது மேலும் ஒரு வழக்கு..!

By vinoth kumar  |  First Published Feb 22, 2023, 12:58 PM IST

சுயேட்சையோடு சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். இதனையடுத்து அந்த தொகுயில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகாவும்,  தேமுதிக சார்பாக ஆனந்தும் போட்டியிட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

சுயேட்சையோடு சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 20ம் தேதி அனுமதியின்றி ஆலமரத் தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டதாக புகாரை அடுத்து மேனகா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி பேரணி நடத்தியதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல், அனுமதி பெறாமல் பேரணி செல்லுதல், கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தி பேரணி என மூன்று பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. 

click me!