அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்..! பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானம்

Published : Jul 11, 2022, 09:59 AM ISTUpdated : Jul 11, 2022, 10:08 AM IST
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்..! பொதுக்குழுவில் நிறைவேறிய  தீர்மானம்

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்க வேண்டும் என 95% நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லையென கூறிவருகிறது. இந்தநிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் அதிமுக எழுச்சி பெற ஒற்றை தலைமை தேவை என்கிற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேரவு செய்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், அதிமுக பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் விதிகளில் மாற்றம் செய்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?