வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கனும்..! உடனே இதை செய்திடுக- அதிமுக நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Apr 4, 2023, 11:05 AM IST

வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதிகரிக்கும் வெயில்

கோடை காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில், வெயிலில் இருந்து பொதுமக்களை தற்காத்து கொள்ளும் வகையில், குடிநீர் பந்தல்களை அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில்,

Tap to resize

Latest Videos

அரசியல் ரீதியாக பல தடைகள்.! விஸ்வாசமும், உழைப்பும் உயர்ந்த இடத்தை அடைய வைத்தது.! ட்விட்டர் ஸ்பேஸில் இபிஎஸ்

குடிநீர் பந்தல் அமைத்திடுக

பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் துடிப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன். தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டும், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில்,

சுகாதாரமுறையில் செயல்படுத்திடுக

ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை, கழக நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

காவிரி டெல்டாவை அழிக்க 6 நிலக்கரி சுரங்கங்கள்.! வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறும்-கதறும் அன்புமணி

click me!