அரசியல் ரீதியாக பல தடைகள்.! விஸ்வாசமும், உழைப்பும் உயர்ந்த இடத்தை அடைய வைத்தது.! ட்விட்டர் ஸ்பேஸில் இபிஎஸ்

Published : Apr 04, 2023, 08:17 AM IST
அரசியல் ரீதியாக பல தடைகள்.! விஸ்வாசமும், உழைப்பும் உயர்ந்த இடத்தை அடைய வைத்தது.! ட்விட்டர் ஸ்பேஸில் இபிஎஸ்

சுருக்கம்

அரசியல் ரீதியாக பல தடைகளை கடந்துள்ளதாகவும், கட்சி தலைமை மீது விஸ்வாசமும் உழைப்பும் இருந்ததால் தான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

டிவிட்டர் ஸ்பேஸ் மூலம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து வருவதாகவும்,  நானும் தொண்டராக இருந்து வந்தவன் என்பதால் தொண்டன் என்ன நினைப்பான் என எனக்கு தெரியும்.

தொண்டன் என்னை சந்தித்து பாராட்டும் போது அவன் முகத்தில் புன்முருவலை பார்க்கும் போது என் மனம் மகிழ்கிறது என கூறினார். இளைஞர்கள் அவசியம் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் அப்போது கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு இளைஞரும் தேச பற்றுள்ளவனாக சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும், இளைஞர்கள் அரசியலுக்கு வர நினைத்தால் பெற்றோர்கள் தடுக்க கூடாது என கூறினார். 

கர்நாடகா அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அறிவிப்பு... கர்நாடகா தேர்தலில் நிற்க முடிவா?


சட்டப்பேரவையில் தாக்குதல்

தொண்டனாக சிலுவம்பாளையம் கிளை செயலாளராக அரசியலை துவங்கி, பொது செயலாளராக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் ரீதியாக பல தடைகளை சந்தித்திருந்தாலும் கட்சி தலைமை மீது விஸ்வாசமும் உழைப்பும் இருந்ததால் உயர்ந்த நிலைக்குவந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அரசியல் வாழ்க்கையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவு, சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவங்கள் மறக்க முடியாது எனவும்,

ஜெயலலிதா மறைவுக்கு பின் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த அன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மு.க.ஸ்டாலினும் வன்முறையில் ஈடுபட்டனர். ஓ.பி.எஸ் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார் என அப்போது நடைபெற்ற சம்பவங்களை  நினைவு கூர்ந்தார். இறுதியாக தான் கல்லூரி படித்த காலத்தில் தந்தையிடம் புல்லட் பைக் கேட்டதயும், தன்னால் ஸ்டாண்ட் போட முடியாததால் உதவிக்கு உதவியாளர் வைத்துக்கொண்ட கதையையும் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்

200 கார்கள்.. 50 சீர்வரிசை தட்டுகள்.. இபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மாஸ் காட்டிய விஜயபாஸ்கர்..!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!