கள்ளக்குறிச்சி வன்முறை ; தமிழக அரசு மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jul 18, 2022, 2:27 PM IST
Highlights

உளவுதுறையின் தோல்வியே கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

தமிழக அரசு வெட்கி தலை குனிந்துள்ளது

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்தில் நீதி வேண்டிய நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், பள்ளியில் உள்ள பேருந்து , வகுப்பறை அடித்து நொறுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின்  பெற்றோர் தரப்பு தொடர்ந்த வழக்கில் கருத்து கூறிய சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் அமைதி மாநிலம் என்ற கருத்தை புரட்டி போட்டு இருப்பதாக  தெரிவித்தார். போலீஸ் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாத்தால்  சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியவில்லையென கூறினார். பெண்கள் பாதுகாப்பிலும், சட்டபாதுகாப்பிலும் தோல்வி அடைந்து தமிழக அரசு வெட்கி தலைகுனிந்து உள்ளதாக தெரிவித்தார். 13 ம் தேதி பள்ளி மாணவி இறந்த சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் ஆன நிலையில் அரசின் மெத்தன போக்கு அலட்சியம் காரணமாகவே இத்தகைய கலவரம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் கொந்தளிப்பான நிலையே 3 நாட்களாக காணப்பட்டதாகவும் கூறினார்.

Explainer:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறந்த விவகாரம்! குற்றவாளிகள் யார்? முழு தகவல்!

தமிழக உளவுத்துறை தோல்வி 

இந்த விடியோ அரசு உளவு துறையின் மூலம் தகவலை சேகரித்து முன்னெச்சரிக்கை மூலம் நடவடிக்கை எடுத்து இருந்தால் இத்தகைய சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என குறிப்பிட்டார். பள்ளி தாக்கப்பட்டதே உளவு துறை செயலிழந்து விட்டதற்கு காரணம் என குறிப்பிட்டார். இப்போது பள்ளியை சேர்ந்த நிர்வாகிகளை கைது செய்துள்ள தமிழக அரசு இதை முன்னரே செய்து இருந்தால், முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் இந்த சம்பவம் நடைபெறாமல் தவிர்த்து இருக்கலாம் என கூறினார்.  இதனை செய்ய தவிர்த்ததால் தான் இந்த அரசை செயலற்ற அரசு என குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். எதிர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு கூட பாதுகாப்பு கேட்டு புகார் அளித்த நிலையில், ரவுடிகளுக்கும் குண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த அரசு தான் இந்த திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா...? விசாரணை நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்


 

click me!