20 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர், அடிப்படையாகத் தேவைப்படும் பிராண வாயு உபகரணங்களை கூட கொள்முதல் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சுவாச கருவிற்கு பதிலாக டீ கப்
உத்திரமேரூரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் பேப்பர் கப்பை பயன்படுத்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்”பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியிட்டு விடியா திமுக-வின் ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை இன்றைய நாளிதழ்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. 120 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்,
மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லையா?
அரசு மருத்துவமனைகளில் அடிப்படையாகத் தேவைப்படும் பிராண வாயு உபகரணங்களை கூட கொள்முதல் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர் காக்கும் பிராண வாயு உபகரணங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைவின்றி கிடைக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் விஷ காய்ச்சல், சிக்கன் குன்யா, டெங்கு போன்றவை பரவி மக்கள் அவதிப்படுவதால், சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்ற எனது யோசனையை ஏற்காமல் சுகாதாரத்துறை அமைச்சர் மழுப்பலான அறிக்கை ஒன்றை வெளியிட்டார், தமிழக மக்கள் உடல் நலன் காப்பதில் அரசியல் செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்து விடாமல் ,அடிப்படை தேவையான இந்த சிறப்பு முகாம்களையும் உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் நடத்திட இந்த விடியா அரசை மீண்டும் வலியுறுத்துவதாஎ தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்தது என்ன.?
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில், உத்திரமேரூரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் பேப்பர் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் விவகாரத்தில் மருத்துவ சேவை இயக்குநர் தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அச்சிறுவனுக்கு பேப்பர் கப்பை செவிலியர்கள் போடக்கூடாது என வலியுறுத்தியும் அந்த சிறுவனின் தந்தையே போட்டுவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது ஒரு சிறிய விஷயம் தான். ஆனால் அதை வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்