மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி…

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி…

சுருக்கம்

eps and ops put garland thevar statute

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி…

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செறுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110 ஆவது பிறந்த நாள் மற்றும் குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்தார்.

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததது. மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!