ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பதிலடி.....‘ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது’ !!!

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 07:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பதிலடி.....‘ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது’ !!!

சுருக்கம்

narenera modi reply to chidambaram

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியதன் மூலம், காங்கிரஸ் கட்சி நம்முடைய வீரம் மிக்க ராணுவ வீரர்களை அவமதித்து விட்டது.  என்று பிரதமர் நரேந்திரமோடி கடுமையாகச் சாடினார்.

கர்நாடக பயணம்

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனிவிமானம் மூலம் அங்கு சென்றார். முதலில் மங்களூரு அருகே உள்ள தர்மஸ்தலாவுக்கு சென்றார்.தக்சினகன்னடாவில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

பொதுக்கூட்டம்

அதன் பின் பெங்களூரில் உள்ள தசாமா சவுந்தர்யா லாகரி பிரயானட்சேவா மஹாசரமாபானேபொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி  பேசினார். அவர் பேசியதாவது-

அவமதிக்கும் செயல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார். நாட்டிலேயே மிகவும் பழைமையான கட்சி என சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி ஏன் காஷ்மீர் சுயாட்சிக்கு ஆதரவுக் குரல் தருகிறது. இது நமது வீரம் மிக்க ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலாகும்.

புரிந்துவிட்டது

ப.சிதம்பரத்தின் இந்த வார்த்தைகள் துணிச்சல் மிக்க நமது ராணுவ வீரர்களின் செயல்களையும், ‘துல்லியத் தாக்குதல்’ போன்ற சிறப்பான சாதனைகளையும் குறைத்து மதிப்பிடுவது போன்றதாகும்.

காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சின் மூலம், துல்லியத் தாக்குதல் குறித்தும், நமது ராணுவ வீரர்களின் வீரம் குறித்தும் அந்த கட்சி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

பதில் கூற வேண்டும்

சிதம்பரத்தின் பேச்சு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி நிச்சயம் பதில் அளிக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுகளை ஏற்க முடியாது.

 இந்தியா-சீனாவுக்கும் இடையே டோக்லாம் எல்லை பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தங்களது தலைவர்கள் மூலம் பொய் பிரசாரங்களை பரப்பியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?. இந்திய மக்கள் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனால், இதுதான் அவர்களின் நடத்தை என்று புரிந்துவிட்டதா?

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தர்மஸ்தலா அருகே உஜ்ரே நகரில் ஏற்பாடு ெசய்யப்பட்டு இருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர்  பேசியதாவது-

ஏன் ரூபாய் நோட்டு தடை?

நாங்கள் கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். பொருளாதாரத்தில் ரொக்கப்பணத்தை அதிகமாகச் சாரக்கூடாது என்பதற்காகவே இதைக் கொண்டுவந்தோம். குழந்தைகளுக்கு அதிகமாக செலவுக்கு பணம் கொடுத்தால் கெட்டுப்போய்விடுவார்கள் என நினைத்து பெற்றோர்கள் குறைவாக கொடுப்பதில்லையா?

ராஜீவ்காந்தி மீது தாக்கு

இதற்கு முன் ஆட்சியில் இருந்த ஒரு பிரதமர்(ராஜீவ் காந்தி) ஒரு முறை கூறினார், அரசு மக்களுக்காக அளிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும், 15 காசுகள் மட்டுமே கிராமத்தில் உள்ள மக்களுக்கு சென்று சேர்கிறது என்று கூறி இருந்தார்.  எந்த ‘கை’ இந்த ரூபாயை குறைத்தது.

ஆனால், எங்கள் அரசு மக்களுக்கு செலவுசெய்யக்கூடிய ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறது. எந்த ஊழலும் இன்றி மக்களின் நலனுக்காக செலவு செய்ய உறுதி பூண்டுள்ளது.

டிஜிட்டல் பரிமாற்றம்

மனிதன் முதலில் கற்களையும், ரப்பர்களையும், தங்கத்தையும், வெள்ளியையும் காசுகளாகப் பயண்படுத்தி இப்போது காகித ரூபாய்க்கு வந்துள்ளான். இதுதான் உலகப்பொருளாதாரத்தின் வரலாறு. இப்போது இருக்கும் உலகம் டிஜிட்டல் உலகம், டிஜிட்டல் கரன்சிக்கான உலகம்.  இதில் இந்தியா பின்தங்கிவிடக்கூடாது’’ என்று பேசினார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?