AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு

Published : Jun 29, 2022, 08:20 AM IST
AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு

சுருக்கம்

AIADMK : இந்நிலையில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர அவரது தரப்பு முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. 

அதிமுக - ஒற்றை தலைமை

அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்துள்ளது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்டார். மேலும் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர அவரது தரப்பு முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இபிஎஸ் Vs ஓபிஎஸ்

மேலும் பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி தொடர்புடையது. 

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

இதையும் படிங்க : TASMAC: மாஸ்க் இருந்தா தான், இனி மது கிடைக்கும்.. டாஸ்மாக் அதிரடி உத்தரவு - குடிமகன்கள் ஷாக்!

இதில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் ஆதரவாளர்

மதுரையை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் இன்று மதுரையின் முக்கிய பகுதிகளில் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் மேற்கண்ட நான்கு பேரும் நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி நீக்கம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நால்வரிடமும் அதிமுக கழகத் தோழர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் அந்த போஸ்டரில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்ட்டரை மிசா செந்தில் என்பவர் மதுரை முழுக்க ஒட்டியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!