எடப்பாடி பழனிசாமிக்கு சுத்துபோடும் ஓபிஎஸ்.. திரும்பிய பக்கமெல்லாம் செக்?

By vinoth kumarFirst Published Jun 29, 2022, 7:04 AM IST
Highlights

அதிமுக பொதுக்குழு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு நள்ளிரவில் விசாரணை நடைபெற்று அதிகாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பொதுக்குழுவிற்கு தடை இல்லை. ஆனால், 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என நீததிபதிகள் கூறினர். இந்நிலையில், ஜூலை 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவராக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு..! ஓபிஎஸ் அணியில் இருந்து தாவிய பொதுக்குழு உறுப்பினர்கள்

மேலும்,  ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து, ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் கூடும் என அறிவித்தது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு செயல் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதித்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இதையும் படிங்க;- நீங்க விதியைப் பத்தி கேக்குறீங்க.. நான் கட்சி தலைவிதியை பற்றி கவலைப்படுகிறேன்.. குமுறும் ஓபிஎஸ் ஆதரவாளர்..!

தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவமதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும் . இது நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது. நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். 

இதையும் படிங்க;-  எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

எடப்பாடி தரப்பினர் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என கூறியுள்ள நிலையில் இதனை தடுக்க தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு, நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட ஆயுதங்களை ஓபிஎஸ் தரப்பினர் கையில் எடுத்துள்ளனர்.

click me!