எண்ணூர் துறைமுகைத்தை தனியாருக்கு தாரைவார்க்க விடமாட்டோம் – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆவேசம்...

First Published Jun 23, 2017, 6:13 PM IST
Highlights
Ennore will not let the harbor fall to private said Minister in the Assembly


எண்ணூர் காமராஜ் துறைமுகத்தை எக்காரணத்தை கொண்டும் தனியாருக்கு தாரை வார்க்க விடமாட்டோம் என அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

மானிய கோரிக்கைகள் மீதான சட்டப்பேரவை நடைபெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில், எண்ணூர் காமராஜ் துறைமுகம் 3,100 ஏக்கர் பரப்பளவை கொண்டது எனவும் இதனால் 68 சதவீதம் மூலதனம் கிடைப்பதாகவும் திமுக உறுப்பினர் சுதர்சனம் தெரிவித்தார்.

மேலும் இந்த துறைமுகத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்க தயாராக உள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்த எந்த அறிக்கையும் மத்திய அரசிடம் இருந்து தமிலாகத்திற்கு வரவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் இதுகுறித்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.சி சம்பத்  காமராஜ் துறைமுகத்தை எக்காரணத்தை கொண்டும் தனியார் மையமாக்க விடமாட்டோம் எனவும்  தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து தமிழக அரசு போர்க்கொடி பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கரும்பு அரவை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாகவும்,  சிஏஜி அறிக்கையில் சர்க்கரை ஆலை மூலம் ரூ.125 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எழுப்பப்பட்ட குற்றசாட்டுக்கு வறட்சி காரணமாகவே  கரும்பு விவசாயம் குறைந்து விட்டதாக அமைச்சர் எம்.சி சம்பத் பதிலளித்தார்.

click me!