காா்த்தி சிதம்பரம் ஏறிய விமானத்தில் இயந்திர கோளாறு.. அதிஷ்டவசமாக தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடித்த விமானி.

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2021, 10:36 AM IST
Highlights

பயணிகள் அனைவரும் இரவு 8.30 மணிக்கு முன்னதாகவே வந்து பாதுகாப்பு சோதணை உட்பட அனைத்தும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனா்.விமானத்தில் பயணிகளை ஏற்றும் முன்பு விமானத்தின் இயந்திரங்களை விமானி சரி பாா்த்தாா்.  

சென்னை-டில்லி ஏா் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீா் இயந்திரக் கோளாறால் விமானம் தாமதமாகி எம்.பி.க்கள் உள்ளிட்ட 129 பயணிகள் சென்னை விமானநிலையத்தில் 3 மணி நேரம் தவித்தனா். சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு டில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் எம்பிக்கள் காா்த்தி சிதம்பரம், நவனீத கிருஷ்ணன் உட்பட 129 பயணிகள் பயணிக்க இருந்தனா். 

பயணிகள் அனைவரும் இரவு 8.30 மணிக்கு முன்னதாகவே வந்து பாதுகாப்பு சோதணை உட்பட அனைத்தும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனா். விமானத்தில் பயணிகளை ஏற்றும் முன்பு விமானத்தின் இயந்திரங்களை விமானி சரி பாா்த்தாா். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுப்பிடித்தாா். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விமானப்பொறியாளா்கள் ஈடுப்பட்டனா். 

நள்ளிரவு 12 மணிக்கு விமானம் பழுதுபாா்த்து முடிக்கப்பட்டது. அதன்பின்பு பயணிகள்  விமானத்தில் ஏற்றப்பட்டனா். விமானம் 3 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையிலிருந்து டில்லி புறப்பட்டு சென்றது. டில்லி செல்லும் விமானத்தில் ஏற்பட்ட திடீா் இயந்திர கோளாறால்  விமானம் தாமதமாகி எம்.பி.க்கள் உட்பட 129 பயணிகள் 3 மணி நேரம் சென்னை விமானநிலையத்தில் தவித்தனா்.
 

click me!