முடிவுக்கு வருகிறதா கொரோனா 2வது அலை?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 6, 2021, 1:03 PM IST
Highlights

நாளை என்னையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரையும், டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். அதன்படி வருகிற 9-ம் தேதி அவரைச் சந்தித்து கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசவிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக் கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போதிய தடுப்பூசிகள் ஒதுக்கக் கோரி டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்தறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;-  தமிழகத்தில் 3,300 பேருக்கு கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டதாகவும்,  122 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. நோய் அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு வர வேண்டும். 

தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம். மாவட்டங்களில் உள்ள பாதிப்புகள், மக்கள்தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் பிரித்து கொடுக்கப்படுகிறது. மருந்துகளை வீணாக்காமல் திட்டமிட்டு செலுத்தப்படுகிறது. தடுப்பூசி குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை பேப்பரில் தான் அறிக்கை வெளியிடப்படும்' என்றார்.

நாடு முழுவதும் 35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறகிறது. இதுவரை மத்திய தொகுப்பில் இருந்து 1.57 கோடி டோஸ் தடுப்பூசி தமிழகம் வந்துள்ளது. ஜூலை 21-ம் தேதியிலிருந்து ஒட்டுமொத்த தயாரிப்பு தடுப்பூசிகளில் 75 சதவீதம் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்று முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

நாளை என்னையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரையும், டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். அதன்படி வருகிற 9-ம் தேதி அவரைச் சந்தித்து கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசவிருக்கிறோம் என்று தெரிவித்தார்.மேலும், கொரோனா 2வது அலை முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாகவும், 3வது அலை வந்தாலும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

click me!