மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு: 40 முதல் 60 சதவீத மானியம் என அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2020, 10:51 AM IST
Highlights

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையின் மூலம் உள்நாட்டு நீர் நிலைகளில், மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையின் மூலம் உள்நாட்டு நீர் நிலைகளில், மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மீன் வளர்ப்போர் மற்றும் மீன் வளர்ப்பு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு மானிய உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-21 இன் கீழ் நீர்ப்பாசன குளங்களில், மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்தல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான குளங்களில் மீன்  விரலிகள் இருப்புச் செய்தல் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு உள்ளிட்டு மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள்  செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டம் 2020-21 இன் கீழ், ரூபாய் 12.42 கோடி மதிப்பில் பாசன குளங்களில் மீன் விரலிகள் இருப்புச் செய்தல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல், ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பிரதம மந்திரி மத்திய சம்பட யோஜனா 2020-21 திட்டத்தின்கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு புதிய மீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைத்தல், மீன் குஞ்சு வளர்த்தெடுக்கும் பண்ணைகள் அமைத்தல், உள்ளீட்டு வாணிபம், மீன் விதைப் பண்ணை அமைத்தல், நீரினை மறுசுழற்சி முறையில் மீன் வளர்ப்பு மற்று உயிர் கூழ்மாம் (biofloc)முறையில் மீன் வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பத்துடன் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மீன் வளர்ப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. 

இத்திட்டங்களின் கீழ் மீன் வளர்ப்பு மேற்கொள்ள பொது பிரிவினருக்கு 40% மற்றும் மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படும். இத்திட்டங்களில் சேரவிரும்பும் மீன் வளர்ப்போர், அந்தந்த மாவட்ட மீன் துறை உதவி இயக்குனர் அலுவலக ங்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!