தென் மாவட்டங்களில் 12% வாக்குகளை இழக்கிறது அதிமுக!! 25% வாக்குகளுடன் திமுக.. புதிய தேர்தல் கணக்குகள்.. ஏசியா நெட் நியூஸ் சர்வே

By karthikeyan VFirst Published Aug 4, 2018, 6:52 PM IST
Highlights

தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட சர்வே முடிவின் அடிப்படையில், தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கான செல்வாக்கு சரிந்துள்ளது.

தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் மத்திய பிராந்திய மக்களின் பிரச்னைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான அப்பகுதி மக்களின் ஆதரவு எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்தோம். 

தற்போது, AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு தென் மாவட்டங்களில் நடத்திய ஆய்வின் முடிவுகள் குறித்து பார்ப்போம்.

"

தென் மாவட்டங்கள்:
 
திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது தென் தமிழகம். 

மக்கள் பிரச்னைகள்:

தென்மாவட்டங்களை பொறுத்தமட்டில் தண்ணீர் பிரச்னையும் வேலைவாய்ப்பின்மையுமே பிரதான பிரச்னைகளாக உள்ளன. 

தென் மாவட்டங்களில் பெரியளவில் தொழில் வளர்ச்சி இல்லாததால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை சார்ந்தே இருக்கிறது. வானம் பார்த்த பூமி என்பதால், மழை இல்லையென்றால் விவசாயமும் பாதித்துவிடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் கணிசமான அளவில் மீனவர்கள் உள்ளனர். 

அதனால் தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என 12% மக்களும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என 14% மக்களும் கோரியுள்ளனர். 


விலைவாசி உயர்வு பெரும் பிரச்னையாக இருப்பதாக 9% பேரும் உயர்கல்வி வசதி போதுமானதாக இல்லை என 8% பேரும் தெரிவித்துள்ளனர். லஞ்சம் மற்றும் ஊழல் பிரச்னையை 7% பேர் குறையாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் 5% பேர் மின்சார விநியோகம் முறையாக இல்லை என குறை கூறியுள்ளனர்.

ஆதிக்க சமூகம்:

முக்குலத்தோர், தலித் ஆகிய சமூகத்தினர் பெருவாரியாக உள்ளனர்.

வாக்கு பகிர்வு:

மக்களின் ஆதரவை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமூகத்தினர் 46% பேர் அதிமுகவிற்கும் அதில் சரிபாதியான 23% பேர் மட்டுமே திமுகவிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்திற்கு 9% மற்றும் கமல்ஹாசனுக்கு 6% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தினகரன் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் அவருக்கு அச்சமூகத்தினரின் ஆதரவு ஒரு சதவிகிதம் கூட கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக தென்மாவட்டங்களில் அதிமுகவிற்கு 29% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் தென் மண்டலத்தில் 41% வாக்குகளை பெற்ற அதிமுக, 12% ஆதரவை இழந்துள்ளது. 

ஆனால் திமுக கடந்த 2014 மக்களவை தேர்தலில் தென் தமிழகத்தில் 23% வாக்குகளை பெற்ற திமுகவிற்கு தற்போது 25% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ரஜினிகாந்திற்கு 9% ஆதரவும் கமல்ஹாசனுக்கு 5% ஆதரவும் உள்ளது. 

வடமாவட்டங்கள் மற்றும் சென்னையின் கள நிலவரங்களை ஏசியாநெட் நியூஸ் தமிழின் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம். 

click me!