பா.ஜ.க.வை இனி அசைக்க முடியாது... இன்ப அதிர்ச்சியில் மோடி..!

By Thiraviaraj RMFirst Published May 23, 2019, 12:06 PM IST
Highlights

பெரும்பான்மைக்கு அதிகமான தொகுதிகளில் பாஜக மட்டுமே தனித்து வெற்றி பெற உள்ளதால் இனி ஐந்தாண்டுகளுக்கு எந்தக் கட்சியின் தயவையும் பாஜக இனி எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

தேர்தல் முடிவுகள் பாஜகவை இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான தொகுதிகளில் பாஜக மட்டுமே தனித்து வெற்றி பெற உள்ளதால் இனி ஐந்தாண்டுகளுக்கு எந்தக் கட்சியின் தயவையும் பாஜக இனி எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

543 உறுப்பினர்களில் மத்தியில் ஆட்சி அமைக்க 282 உறுப்பினர்களின் பலம் தேவை. அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 324 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் 286 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியின் ஆதரவும், இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. 

நாடாளுமன்றத்தில் மசோதாக்களையோ, மசோதா திருத்தங்களையோ மேற்கொள்வதில் எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லை. பாஜக எந்த ஒரு மசோதாவையும் எப்போதும் நிறைவேற்றிக் கொள்ளலாம். எதிர்கட்சிகள் எதிர்த்தாலும் அது நாடாளுமன்றத்தில் எடுபடாது. ஆகையால், கடந்த முறையை விட இந்த முறை பாஜக வலுவாக ஆட்சியை அமைக்க உள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியை பாஜகவே எதிர்பார்த்திருக்காது. இதனால், பாஜக மட்டுமல்ல மோடியும் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.        
 

click me!