இந்தியா முழுவதும் 60 இடங்களைக் கூடத் தாண்டாத காங்கிரஸ்..! கட்சி நீடிக்குமா..?

Published : May 23, 2019, 11:37 AM IST
இந்தியா முழுவதும் 60 இடங்களைக் கூடத் தாண்டாத காங்கிரஸ்..! கட்சி நீடிக்குமா..?

சுருக்கம்

காங்கிரஸ் கட்சி தனியாக 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பாஜக தனியாக 285 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

327 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாடகக் கூட்டணி. காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 11 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.  

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பாஜக தனியாக 285 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு இணையாக தேசிய அரசியலில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸின் எதிர்காலம் இதனால் கேள்விக்குறி ஆகி இருக்கிறது.

மீண்டும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால் ஐந்தாண்டு காலம் இந்த ஆட்சியை அசைக்க முடியாது. தொடர்ந்து பத்தாண்டுகள் பாஜக ஆட்சி நீடிக்க உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் நிலை இனி என்னவாகுமோ என பதற்றத்தில் இருக்கிறார்கள் கதர்கட்சி தொண்டர்கள்.  

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!