கர்நாடகாவில் தேர்தல் ஒத்திவைப்பு ?  தேர்தல் ஆணையம் அதிரடி…

Asianet News Tamil  
Published : May 11, 2018, 10:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கர்நாடகாவில் தேர்தல் ஒத்திவைப்பு ?  தேர்தல் ஆணையம் அதிரடி…

சுருக்கம்

election postponed in R.R.Nagar constituency in karnataka

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  கட்டு கட்டாக  வாக்காளர் அட்டையாள அட்டை  பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர். நகர் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு மே 28 ஆம் தேதி தேர்தலும், 31 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளி பகுதியில் பாஜக பிரமுகர் தங்கியிருந்த பிளாட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.



இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று அங்கு சோதனை மேற்கொண்டனர். அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள், லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். 

இதுதொடர்பாக, கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து மாறி மாறி புகாரளித்தனர். இந்நிலையில், அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் 28-ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும்.. தலைமை வேஸ்ட்.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஜோதிமணி!
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!