
தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் நவம்பர்19-ல் இடைதேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களில் விதிமீறல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க, அரவக்குறிச்சி தேர்தல் செலவினப் பார்வையாளராக பீஹாரை சேர்ந்த மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் சில்ஆஷிஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சில் ஆஷிஸ் தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதில், அஜய் தத்தார்த்ராயா என்பவர் புதிய தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
மேலும், இந்த முறையும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பணப்பட்டுவாடாவை ஆரம்பித்துள்ளதாகவும், இதுகுறித்த புகார்களை சில் ஆஷிஸ் தடுத்ததால்தான் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த முறை கரூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சில்ஆஷிஸ், அப்போது அதிமுக, திமுக கட்சிகளின் பணப்பட்டுவாடா மற்றும் செலவின விபரங்களை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தவர் இவர் என்பதும், இதன் மூலமே தேர்தல் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.