
கடந்த 1845ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது நவம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் வரும் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
அதற்கு காரணமும் இருக்கிறது19-வது நூற்றாண்டில் அமெரிக்க விவசாயம் சார்ந்த நாடாகும். இங்குள்ள மக்கள் தங்களின் அறுவடை காலம் முடிந்து நவம்பர் மாதத்தில்தான் ஓய்வில் இருப்பார்கள். ஆதலால், தேர்தல் நவம்பரில் நடத்தப்படுகிறது.
மேலும், காலநிலையும் இதமாக இருப்பதால், கிராமங்களில் உள்ள மக்கள் மாவட்ட தலைநகருக்கு நடந்து வந்தோ, அல்லது குதிரைகளில் வந்தோ வாக்களிக்க சரியான காலகட்டம் நவம்பர் மாதமாகும்.
செவ்வாய்கிழமை ஏன்?
தேர்தலை திங்கள்கிழமை வைத்திருந்தால், அனைத்து மக்களுக்களும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தியபின், தேர்தல் நடக்கும் நகருக்கு செல்வதில் பிரச்சினை ஏற்படும்.
உரிய நேரத்துக்கு சென்று வாக்களிக்க முடியாது. ஆதலால், ஒரு நாள் தாமதமாக செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வழக்கம் இப்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றால், நவம்பர் மாதத்தில் தேர்தல்