District secretary :பார்வை மாற்றுத்திறனாளி மாவட்ட செயலாளராக தேர்வு... தமிழகத்தில் சாதனை செய்த முக்கிய கட்சி..!

By Thiraviaraj RMFirst Published Jan 12, 2022, 11:22 AM IST
Highlights

தமிழக அரசியலில் பார்வை மாற்றுத்திறனாளி முக்கிய அரசியல் கட்சி  மாவட்ட செயலாளராக தேர்வானது இதுவே முதல் முறை எனலாம். 

இந்தியாவிலேயே பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர், ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வாகி செயல்பட முடியும் என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 100% பார்வை மாற்றுத்திறனாளியான பாரதி அண்ணா செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இன்று தேர்வாகி உள்ளார். பாரதி அண்ணா ஒரு வழக்கறிஞர்!

மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு நிறைவடைந்துள்ளது. இதில் கட்சியின் மாவட்டக் குழுவிற்கு புதிய செயலாளராக தோழர் பாரதி அண்ணா தேர்வாகியுள்ளார். அவர் வழக்கறிஞர். 100% பார்வை மாற்றுத் திறனாளியும் ஆவார். pic.twitter.com/pkW0QeJUt1

— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim)

 

தமிழக அரசியலில் பார்வை மாற்றுத்திறனாளி முக்கிய அரசியல் கட்சி  மாவட்ட செயலாளராக தேர்வானது இதுவே முதல் முறை எனலாம். 

அண்ணா சிபிஐஎமில் மாணவர் பிரிவின் ஐடி விங் மூலம் கட்சியில் நுழைந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, செங்கல்பட்டில் பயிற்சியைத் தொடங்கினார். “எனக்கு மூன்று வயது வரை பார்வை இருந்தது. பின்னர், குறுகிய பார்வை என்று கண்டறியப்பட்டது. 2014 இல் முழுமையான குருட்டுத்தன்மையாக மாறியது”என்று அவர் கூறினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைச் செயலாளராக இருந்துள்ளார்.

"ஒட்டுமொத்தமாக கண்பார்வை இழப்பு என்னை வேலை செய்வதைத் தடுத்தது, நான் ராஜினாமா செய்தேன். மன அழுத்தத்தையும் தாங்கினேன். ஆனால் நவீன தொழில்நுட்பம் கைக்கு வந்ததால், உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் பணியாற்றத் தொடங்கினேன்,'' என்றார்.

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான தமிழ்நாடு சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

click me!