AIADMK: எடப்பாடியாரின் வலது கரம் வீட்டில் அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் அதிமுக.!

Published : Feb 16, 2022, 11:12 AM IST
AIADMK: எடப்பாடியாரின் வலது கரம் வீட்டில் அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் அதிமுக.!

சுருக்கம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் நண்பரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் நண்பரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர். ஆனால், ஆளுங்கட்சியான திமுக மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. தேர்தல் பிரச்சார களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். இவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான, தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். 

இந்நிலையில், நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பரிசுப்பொருட்கள், பணம் பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, பறக்கும் படையினர் மற்றும் சேலம் மாவட்ட காவல் துறையினர் ஒன்றிணைந்து இளங்கோவன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 8.30 மணிமுதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!