திடீரென மாறிய தேர்தல் கள நிலவரம்..! அதிர்ச்சியில் திமுக..! ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

Published : Mar 29, 2021, 10:38 AM ISTUpdated : Mar 29, 2021, 10:53 AM IST
திடீரென மாறிய தேர்தல் கள நிலவரம்..! அதிர்ச்சியில் திமுக..! ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

சுருக்கம்

இதுநாள் வரை எளிதாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் கடுமையாக உழைக்காத திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பதன் பின்னணி தெரியவந்துள்ளது.

இதுநாள் வரை எளிதாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் கடுமையாக உழைக்காத திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பதன் பின்னணி தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பிரச்சாரத்தை துவக்கியது முதல் திமுகவின் பிரசாந்த் கிஷோர் டீம் தேர்தல் கள நிலவரம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. குறுகிய கால இடைவெளியில் செய்யப்படும் இந்த ஆய்வின் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வியூகம் வகுக்கப்படும். அதன்படி துவக்கத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வந்தார்.

ஆனால் கடந்த வாரம் பிரச்சாரம் நடைபெறும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு வேன் பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் திடீரென சாலையில் இறங்கி மக்களிடம் வாக்கு சேகரித்தார். இப்படி கடந்த சில நாட்களாக திமுக பிரச்சார வியூகத்தை மாற்றியுள்ளது. இதற்கு காரணம் தேர்தல் கள நிலவரம் மாறிப்போனது தான் என்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வரை திமுகவிற்கு மிக சாதகமாக இருந்த தேர்தல் களம், தற்போது மிகவும் கடினமாகியுள்ளதாக சொல்கிறார்கள். அதிலும்குறிப்பாக கிராமப்புறங்களில் அதிமுகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது.

 

இலவச வாஷிங் மெசின், மாதம் ரூ.1500 உதவித் தொகை, இலவச கியாஸ் சிலிண்டர்கள் பான்ற அதிமுகவின் அறிவிப்பு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மிகவும் இழிவாக பேசியது பெண்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தை வைத்து அதிமுக ஐடி விங்க் செய்த ஆன்லைன் பிரச்சாரமும் அதிமுகவிற்கு கை கொடுத்துள்ளது. ஏற்கனவே திமுகவிற்கு பெண்கள் ஆதரவு மிக மிக குறைவு. தற்போது ஆ.ராசாவின் பேச்சால் அது மேலும் குறைந்திருக்கும் என்கிறார்கள்.

இதோடு தேர்தல் பணிகளில்மிக மிக முக்கியமான ஒரு விஷயம் பணம் தான். திமுக வேட்பாளர்களால் தாராணமாக செலவு செய்ய முடியாத நிலையே தற்போது உள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் செலவுகளுக்காக பணம் கணக்கச்சிதமாக பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது. இதே போல் திமுக வேட்பாளர்கள் தற்போது வரை பூத் ஏஜென்டுகளுக்கு கூட பணம் கொடுக்க இயலாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால்அதிமுகவோ பூத் ஏஜென்டுகளுக்கு ஒரு முறை பட்டுவாடாவை முடித்து 2வது பட்டுவாடா செய்து வருவதாக சொல்கிறார்கள்.

இதனால் அதிமுகவினர் மிக மிக ஆர்வமாக திண்ணை பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் மெல்ல மெல்ல தற்போது அதிமுகவிற்கு சாதகமாகி வருவதாக பேச்சு அடிபடுகிறது. இவற்றை எல்லாம் உணர்ந்து தான் கடந்த சனிக்கிழமை திமுக தலைவர் அக்கட்சி நிர்வாகிகளை எச்சரிக்கும் தொனியில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இதற்கு காரணம் தமிழகம் முழுவதும் பரவலாக திமுக தேர்தல் பணிகளில் ஏற்பட்டிருந்த சுணக்கம் தான் என்கிறார்கள்.

வெற்றி திமுகவிற்குத்தான் என்று எண்ணி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று தொடர்ந்து வந்த புகார்கள் தான் ஸ்டாலினை உஷார் ஆக்கியுள்ளது. அத்தோடு அதிமுக தரப்பினரின் தேர்தல் பணிகள் தேர்தல் களத்தை அவர்களுக்கு சாதகமாக்குவதையும் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் ஆ.ராசாவின் கண்ணியக்குறைவான பேச்சும் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி களத்தை அதிமுகவிற்கு சாதகமாக திருப்பிவிட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்