ஆ.ராசா விவகாரம்..! திமுகவிற்குள் பூகம்பம்..! நெருக்கடியில் மு.க.ஸ்டாலின்..! அடுத்து என்ன?

By Selva KathirFirst Published Mar 29, 2021, 10:34 AM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை மிகவும் இழிவாக பேசிவிட்டு அதற்கு விளக்கம் வேறு கொடுத்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் நேரடியாக மு.க.ஸ்டாலினிடம் கூறி வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை மிகவும் இழிவாக பேசிவிட்டு அதற்கு விளக்கம் வேறு கொடுத்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் நேரடியாக மு.க.ஸ்டாலினிடம் கூறி வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில்பேசிய ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசியது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு தான் முதலமைச்சரின் தாயார் தவசி அம்மாள் மறைந்திருந்தார். இதற்காக திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் நேரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தார். ஆனால் தற்போது ஆ.ராசா பேசிய பேச்சை மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டிக்கவில்லை. இதற்கு காரணம் திமுகவில் ஆ.ராசாவுக்கு உள்ள செல்வாக்கு என்கிறார்கள்.

தவிர குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திமுகவின் கஜானாவாக ஆ.ராசா செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் மீது தற்போது நடவடிக்கை எடுப்பது அந்தமாவட்டங்களில் திமுகவின் தேர்தல் பணிகளை பாதிக்கும் என்று ஸ்டாலின் கருதுகிறார். இதனால் ஆ.ராசா பெயரை கூட குறிப்பிடாமல் ஒரே ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டார். ஆனால் அந்த அறிக்கை எடுபடவில்லை. இந்த நிலையில் பிரச்சாரத்தின்போது ஆ.ராசா பேசிய பேச்சுகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் கலங்கியுள்ளார். இதன் பிறகு இந்த விவகாரம் மிகவும் சென்டிமென்ட் விஷயமாகிவிட்டது.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி கண்கலங்கிய வீடியோ வாட்ஸ்ஆப்பில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் பிறகு எடப்பாடியின் தாயார் குறித்து ஆ.ராசா என்ன பேசினார் என்று பலரும் தேட ஆரம்பித்துவிட்டனர். அவர் பேசிய வார்த்தைகளை கேட்டு அவருக்கு எதிராக மட்டும் அல்லாமல் திமுகவிற்கு எதிராகவும் பொதுமக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் பெண்களின் கோபத்தை தணிக்க வேண்டும் என்றால் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு திமுக உயர்மட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை வலியுறுத்த ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த ராதாரவி பெண்கள் தொடர்பாக பேசிய பேச்சால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதே பாணியில் ஆ.ராசாவை ஏன் சஸ்பென்ட் செய்யக்கூடாது என்று ஸ்டாலினிடம் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதே போல் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தரப்பும் ஆ.ராசா மீது கடுமையான நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளது. ஆ.ராசா விவகாரத்தில் திமுக மகளிர்அணிச் செயலாளர் கனிமொழியும் டென்சனில் இருப்பதாக கூறுகிறார்கள். அவரும். ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள்.

இதனால் இந்த விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என்று ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆ.ராசாவை தற்போதைக்கு வேறு எதுவும் பேச வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆ.ராசா மீது கண்துடைப்பிற்கேனும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்இந்த விவகாரத்தில் அதிமுக எளிதாக ஸ்கோர் செய்துவிடும் என்பதால் ஸ்டாலினும் என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

click me!